»   »  பத்ம விருது பெறும் முன் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் ரஜினி!

பத்ம விருது பெறும் முன் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இம்மாதம் 28-ம் தேதி நடக்கும் விழாவில் பத்ம விபூஷன் விருதினைப் பெறுவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்.

கலைத் துறையில் ரஜினியின் சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி இந்த ஆண்டு பத்ம விபூஷண் விருது ரஜினிகாந்த்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Rajinikanth to meet Prime Minister Modi

பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை வழங்கும் நிகழ்வை வரும் 28, ஏப்ரல் 12 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில், மார்ச் 28லேயே ரஜினிகாந்துக்கு விருது வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறையை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து ரஜினிக்கும் மத்திய அரசிடம் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2.ஓ படத்தின் ஷூட்டிங்குக்காக டெல்லியில் ஒரு மாதம் வரை தங்குகிறார் ரஜினிகாந்த். அங்குள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் முக்கிய காட்சிகள் படமாகின்றன.

ரஜினி டெல்லியில் தங்கியிருக்கும் நாள்களில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரைச் சந்திக்க நேரம் கேட்டு ரஜினி அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பத்ம விருது பெறும் நிகழ்வுக்கு முன்னதாக இந்தச் சந்திப்புகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறு பிரதமர், அத்வானி அலுவலகங்கள் அவற்றின் செயலக அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

English summary
According sources, actor Rajinikanth will meet Prime Minister Narendra Modi during his 2.O Delhi schedule.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil