»   »  ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்த பிறகு முக்கிய அறிவிப்பு வெளியிடும் ரஜினி!

ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்த பிறகு முக்கிய அறிவிப்பு வெளியிடும் ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மீண்டும் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடும் ரஜினி..!!

சென்னை: நாளை முதல் மூன்று நாட்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கும் ரஜினிகாந்த், அதன் பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.

அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், அடுத்து தனது ரஜினி மக்கள் மன்றத்துக்கு ஆள் சேர்ப்பை தீவிரப்படுத்தினார். தமிழகம் முழுவதும் ஆள் சேர்ப்பு வேலை ஜரூராக நடந்து வருகிறது.

Rajinikanth to meet RMM functionaries

இதுவரை மூன்று மாவட்டங்களுக்கு நிர்வாகிகளையும் அறிவித்துள்ளார் ரஜினி. கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களுக்கு அடுத்து நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் திடீரென தனது மன்ற நிர்வாகிகளை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தார் ரஜினிகாந்த். அதில் உறுப்பினர் சேர்க்கை மேலும் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

இப்போது மீண்டும் நிர்வாகிகளைச் சந்திக்கிறார். இந்த சந்திப்பு நாளை தொடங்கி மூன்று நாட்கள் நடக்கும் என்று தெரிகிறது. நிர்வாகிகளுடன் சந்திப்பு முடிந்த பிறகு முக்கிய அரசியல் அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிட இருக்கிறார். அத்துடன் மண்டல வாரியாக நிர்வாகிகளையும் அவர் அறிவிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

English summary
Rajinikanth is going to meet Rajini Makkal Mandram functionaries from Tomorrow

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil