ரசிகர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு.. இனிப்பு வழங்கி வாழ்த்து
தீபாவளியை முன்னிட்டு தனது வீட்டு வாயில் முன் குழுமிய ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்தினார்.
நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு விசேஷ தினத்திலும் தன் வீட்டு வாசலில் குவியும் ரசிகர்களை சந்திப்பது வழக்கம்.
இந்த ஆண்டு ரசிகர்கள் சந்திப்புடன் கூடுதலாக இனிப்புகளையும் வழங்கி வாழ்த்தினார்.

70 வயதிலும் எட்ட முடியாத உயரத்தில் ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் 80 தனது திரை பயணத்தை ஆரம்பித்து இன்று வரை தமிழகத்தில் நம்பர் ஒன் உச்ச நட்சத்திரமா இருந்து வருகிறார். அவருக்கும் மற்ற இரண்டாவது, மூன்றாவது இடத்தில் இருக்கும் நடிகர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தால் மிகப்பெரிய அளவில் இருக்கும். எழுபது வயதிலும் எட்ட முடியாத உயரத்தில் ரஜினிகாந்த் இருப்பது அவருடைய ரசிகர்களின் பலத்தினால். ரஜினி நடிக்க ஆரம்பித்த பொழுது பிறக்காதவர்கள் கூட இன்றும் ரஜினி ரசிகர்கள். 2-கே கிட்ஸ் உட்பட ரஜினி ரசிகர்களா இருப்பது அவரது மிகப் பெரிய பலம். ஆக்ரோஷமான இளைஞராக தனது நடிப்பை தொடங்கிய ரஜினிகாந்த் பின்னர் பல வேடங்களில் நடித்தாலும் ஒரு கட்டத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பாணியை கையில் எடுத்தார். தன்னை ஓரளவு சட்டயர் செய்து கொண்டு நகைச்சுவையாகவும், அதே நேரத்தில் சீரியஸான நேரம் வரும் போது டக்கென்று சிறிசாக மாறி எதிரிகளை வீழ்த்தும் பாணி மூலம் பெண்கள் குழந்தைகள் ஆதரவை பெரிதாக பெற்றார்.

முத்து படம் மூலம் ஜப்பானியர்கள் நெஞ்சை கிள்ளிய ரஜினி
முத்து படத்தில் ரஜினிகாந்த் ஏற்ற வேடம் அவருக்கு ஜப்பானிலும் ரசிகர்களை பெற்று தந்தது. தமிழ் நடிகர்களில் ஓவர் சீஸ் என்று சொல்லப்படும் அயல்நாட்டு ரசிகர்களை, அயல்நாட்டில் பெரிய அளவில் வசூலை குவிக்கும் நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இதுவரை அமெரிக்காவில் அதிக வசூல் இயற்றிய படம் ரஜினியின் கபாலி மற்றும் 2.0 படங்கள் தான். தற்பொழுதுதான் பொன்னியின் செல்வன் அந்த ரெக்கார்டை முறியடித்துள்ளது. பொன்னியின் செல்வன் ஒரு கூட்டு தயாரிப்பு அதில் நடிகர்கள் அதிகம், ஆனால் தனி நடிகராக ரஜினியின் படங்கள் பல நாடுகளில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்துள்ளன. அந்த சாதனைகள் இன்றளவும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

எப்போது அவர்தான் டாப்பு
ரஜினிக்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து நடிக்க வந்த நடிகர்கள் கூட அவருடன் போட்டி போட முடியாமல் அடுத்தடுத்த இடங்களில் வெகு தூரத்தில் இருப்பதை பார்க்கிறோம். தமிழ் ரசிகர்கள் முதல் விருப்பம் எது என்று கேட்டால் ரஜினிகாந்த் என்று சொல்வார்கள், அதன் பின்னரே தங்களுடைய அபிமான நடிகர்களை சொல்வார்கள். அந்த அளவுக்கு தமிழ் ரசிகர்கள் விரும்பும் முதல் மனிதராக ரஜினி இருக்கிறார். ரஜினி சென்னை தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் ரசிகர்களுக்கு மதிப்பளிக்க கூடியவர். அவருடைய வீட்டு முன்பு வருடத்திற்கு ஐந்தாறு முறையாவது ரசிகர்கள் கூடி விடுவார்கள்.

விசேஷ நாட்களில் ரஜினியை சந்திக்க குவியும் ரசிகர்கள்
ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12, புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாட்கள் ரஜினிகாந்த் வீட்டு வாசலில் தொண்டர்கள் குவிந்து விடுவார்கள். அவர்களுக்காக ரஜினிகாந்த் வந்து பார்த்து கையசைத்து விட்டு சென்றால்தான் திருப்பி செல்வார்கள். இல்லாவிட்டால் அவர் வரும்வரை வாசலிலேயே காத்துக் கிடப்பார்கள். பல நேரங்களில் ரஜினிகாந்த் தான் இல்லை என்பதை முன்கூட்டியே ரசிகர்களுக்கு தெரிவித்து வீட்டுக்கு வர வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் கூடுவது வழக்கமாக இருக்கும். இந்த ஆண்டும் தீபாவளிக்கு ரஜினியின் படம் வரும் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு அவரது படம் வரவில்லை என்பது ஏமாற்றமே, ஆனாலும் தீபாவளி திருநாள் அன்று ரசிகர்கள் அவர் வீட்டு வாசலில் அவரை பார்ப்பதற்காக குவிந்தனர்.

ஃபிளையிங் கிஸ் கொடுத்த ரஜினி
சிறிது நேரத்திற்கு பிறகு தன் வீட்டுக்குள் இருந்த வந்த ரஜினி, ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு கையசைத்து வாழ்த்துச் சொன்னார். உற்சாகமாக ஃபிரெஷ்ஷாக இருந்த ரைனி முதன்முறையாக ரசிகர்களுக்காக பிளையிங் கிஸ் கொடுத்தார். அதை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் ரசிகர்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. தங்கள் தலைவனை பார்த்தால் அந்த ஆண்டு முழுவதும் உற்சாகமாக இருக்கும் சந்தோஷமாக கழிக்கும் என ரசிகர்கள் தெரிவித்தனர். பலர் வெளியூரிலிருந்து தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடாமல் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்ததை காணமுடிந்தது.


Click it and Unblock the Notifications











