»   »  'ஆஷ்ரம் பள்ளி நில விவாகாரம் குறித்து தவறான செய்திகள்.. ரஜினிக்கு இதில் தொடர்பில்லை!'

'ஆஷ்ரம் பள்ளி நில விவாகாரம் குறித்து தவறான செய்திகள்.. ரஜினிக்கு இதில் தொடர்பில்லை!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஷ்ரம் பள்ளி நிலம் தொடர்பான வழக்கில் தேவையின்றி ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திகளும் தவறானவை என வக்கீல் நளினி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் நடிகர் ரஜினிகாந்துக்குச் சொந்தமான 'தி ஆஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி' உள்ளது. இந்தப் பள்ளியின் நிலம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வெங்கடேசவரலு என்பவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அலுவலகத்தில் புகார் செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், வெங்கடேசவரலு புகார் அளித்தார்.

Rajinikanth not associated with Chennai school, says principal

அந்தப் புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு, தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குநர் உத்தரவு ஒன்று பிறப்பித்தார்.

அதில், 'தி ஆஸ்ரம் மெட்ரிகுலேசன்' பள்ளியை நிர்வகிக்கும், ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலர் லதா ரஜினிகாந்த், நிர்வாக அறங்காவலர் ரஜினிகாந்த், ஆஸ்ரம் பள்ளியின் முதல்வர் ஆகியோர் ஜனவரி 25-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இது தொடர்பாக ஆஷ்ரம் பள்ளி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் நளினி சிதம்பரம், "மெட்ரிக் பள்ளி இணை இயக்குநர் தேவையின்றி ரஜினிக்கும், பள்ளி முதல்வருக்கும், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் ரஜினி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவில்லை. அப்படி வெளியான செய்திகள் தவறானவை.

இது குறித்து, இணை இயக்குநரின் கவனத்துக்கு கொண்டு வருவோம். இணை இயக்குனரின் நோட்டீசுக்கு, சட்டப்படி தேவையான தகவல்களை அளித்து, பிரச்னைக்கு தீர்வு காணப்படும்", என தெரிவித்துள்ளார்.

ஆஷ்ரம் பள்ளி முதல்வர் வந்தனாவும் இதுகுறித்து விளக்க ஆறிக்கை வெளியிட்டுள்ளார்.

English summary
It was widely reported recently that an issue related to a school run by Rajinikanth and his wife was not granted a stay by the Madras High Court. Lawyer Nalini Chidambaram (former Finance Minister P Chidambaram's wife) is representing the school in court. Now, Vandana Tugnait, principal of The Ashram Matriculation Higher Secondary School, Chennai, has issued a statement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil