பிறந்தநாள் அதுவுமா ரஜினி எங்கே சென்றார்...காத்திருந்து ஏமாந்து போன ரசிகர்கள்!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 73வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்து சொல்ல காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தனது அசாத்தியமான ஸ்டைல் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவர் நின்னாலும் ஸ்டைல்...நடந்தாலும் ஸ்டைல்...சிரிச்சாலும் ஸ்டைல் தான்.

இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் ரஜினிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள்,ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் தீவிர ரசிகர்கள் காமென் டிபியை வெளியிட்டு வாழ்த்து கூறிவருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கே பாலசந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன்பிறகு மூன்று முடிச்சு,அவள் அப்படித்தான், 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம், அவர்கள் , நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த ரஜினி, சோலோ ஹீரோவாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் வலம் வருகிறார்.

இணையத்தில் குவியும் வாழ்த்து

இணையத்தில் குவியும் வாழ்த்து

இன்று 73வது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கு கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.அதேபோல தமிழக முதல்வர் முக ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,தனுஷ், சச்சின் டெண்டுல்கர்,குஷ்பு என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் ஊரில் இல்லை

ரஜினிகாந்த் ஊரில் இல்லை

இந்த நல்ல நாளில் ரஜினியை எப்படியாவது சந்தித்து வாழ்த்து கூறிவிடவேண்டும் என ரஜினியின் போஸ் கார்டன் வீட்டின் முன்பு கொட்டு மழையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் கால்கடுக்க காத்திருந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் ஊரில் இல்லை. அவர் இங்கு இல்லாத காரணத்தால் உங்களை வந்து சந்திக்க முடியவில்லை. அதனால் யாரும் மழையில் காத்திருக்க வேண்டாம். அவரின் சார்பாக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வெற்றி திரையரங்கில்

வெற்றி திரையரங்கில்

ரஜினியின் 73வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், டிசம்பர் 9ந் தேதி பாபா திரைப்படம் ரீ ரிலீஸானது. படத்திற்கு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, பாபா திரைப்படம் திரையிடப்பட்டுள்ள சென்னை வெற்றி திரையரங்கில், ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கேக்கை ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் வெட்டினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X