மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்.. அப்போ சிபி சக்கரவர்த்தி படம்.. மகளின் விண்ணப்பம்?

சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் 400 கோடி வசூலை கடந்து 500 கோடி இமாலய சாதனையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக கோலிவுட்டில் பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஒரே படமான தளபதி இன்னமும் ரசிகர்கள் மனதில் நின்னு பேசி வருகிறது.

மீண்டும் அந்த கூட்டணி இணைந்தால் தியேட்டர்கள் தெறிக்கும் என்பது கன்ஃபார்ம் என்பதால், இந்த கூட்டணி அமைய வேண்டும் என ரசிகர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

மாஸ் காட்டிய மணிரத்னம்

மாஸ் காட்டிய மணிரத்னம்

எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் எடுக்க நினைத்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அவர்களுக்கு வெறும் கனவாகவே போன நிலையில், எப்படியாவது அந்த கனவு படத்தை ரசிகர்களுக்கு எடுத்து காட்டி விட வேண்டும் என நினைத்து கொரோனா காலக்கட்டத்திலும் இப்படியொரு படத்தை இயக்கி பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்து நிஜமாகவே மாஸ் காட்டி உள்ளார் மணிரத்னம்.

எப்படி எடுக்கப் போகிறார்

எப்படி எடுக்கப் போகிறார்

பொன்னியின் செல்வன் டீசர், டிரைலர் வந்த போது கூட ரசிகர்களுக்கு படம் வெளியாகி வெற்றியடையுமா? குறைவான வசனங்களையே தனது படத்தில் வைக்கும் மணிரத்னம் வரலாற்று படத்தை எப்படி எடுக்கப் போகிறார் என ஏகப்பட்ட சந்தேகங்கள் பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் இருந்தன. ஆனால், அதையெல்லாம் தவிடு பொடியாக்கி விட்டு தனது ஸ்டைலில் ரியாலிட்டிக்கு நெருக்கமாகவே இப்படியொரு வரலாற்று புனைவு காவியத்தை எடுத்து அசத்தி உள்ளார்.

ஆசைப்பட்ட ரஜினி

ஆசைப்பட்ட ரஜினி

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் உருவாகிறது என்பதை அறிந்த உடனே பெரிய பழுவேட்டரையர் ரோலிலாவது தான் சிறப்பு தோற்றத்தில் நடித்துத் தருகிறேன் என தன்னுடைய ஸ்டார்டம்மையும் விட்டுவிட்டு கேட்டுள்ளார் ரஜினிகாந்த். ஆனால், அவரது ரசிகர்களுக்கு அது யானை பசிக்கு சோளப் பொறியாகிவிடும் சும்மா விட மாட்டார்கள் என்று சொல்லியே வேண்டாம் என சொல்லி விட்டார் மணிரத்னம் என்பதை ரஜினியே பொன்னியின் செல்வன் மேடையில் பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

தளபதியை மறக்க முடியுமா

தளபதியை மறக்க முடியுமா

கமலுக்கு ஒரு நாயகன் கொடுத்த மணிரத்னம், ரஜினிக்கு ஒரு தளபதி படத்தை கொடுத்து அப்பவே கெத்துக் காட்டி இருந்தார். மம்மூட்டியுடன் இணைந்து ரஜினிகாந்த் ஒவ்வொரு காட்சியிலும் கண்ணா நான் வெறும் சூப்பர்ஸ்டார் இல்லை அற்புதமான நடிகன் என்பதை நிரூபித்துக் காட்டி இருப்பார். இந்நிலையில், மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி

பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் மணிரத்னமிடம் தனக்கு ஒரு கதை சொல்ல கேட்டிருக்கிறார் ரஜினிகாந்த். உடனடியாக ரஜினிக்கு மணிரத்னம் சொன்ன ஒன் லைன் ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம். விரைவில் அந்த படத்தை பண்ணலாம் என்றும் ரஜினி ஓகே சொல்லியுள்ளதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.

சிபி படம் என்னவாகும்

சிபி படம் என்னவாகும்

சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கிய இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அடுத்து ரஜினி நடிக்கப் போவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தற்போது மணிரத்னம் படத்தின் பேச்சுவார்த்தை எழுந்துள்ள நிலையில், எந்த படத்தை முதலில் ஆரம்பிக்க போகிறார் ரஜினி என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

 மகளும் விண்ணப்பம் போட்டிருக்காரே

மகளும் விண்ணப்பம் போட்டிருக்காரே

நடிகர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். தனது அப்பா ரஜினியை வைத்தே ஒரு படத்தை இயக்க அவரும் விண்ணப்பம் போட்டு இருக்கிறாராம். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியான பிறகு தான் ரஜினி, மணிரத்னம் படத்தின் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் என்றும், ஜெயிலர் படம் முடிந்த உடனே சிபி சக்கரவர்த்தி அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தான் ரஜினி முதலில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X