டைரக்டரா ஜெயிச்சுட்டீங்க...மாதவனை மனம் திறந்து பாராட்டிய ரஜினி

சென்னை : நடிகர் மாதவன் எழுதி, இயக்கி உள்ள படம் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். இந்த படத்தின் மூலம் மாதவன் டைரக்டராக அறிமுகமாகி உள்ளார்.

Recommended Video

Yaanai Movie Review | Yessa ? Bussa ? யானை |Arun Vijay | Priya Bhavani Shankar

இந்த படம் இரண்டு நாட்களுக்கு முன் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்று, பாசிடிவ் கமெண்ட்களையே பெற்றுள்ளது.

ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி உள்ளனர். விக்ரம் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் சூர்யா நடித்த கெஸ்ட் ரோல் அனைவரையும் ஈர்த்துள்ளது. நம்பி நாராயணனை நடிகர் சூர்யா பேட்டி எடுப்பது போன்ற சீனில் தான் அவர் நடித்துள்ளார்.

நம்பி நாராயணனுக்கு என்ன நடந்தது

நம்பி நாராயணனுக்கு என்ன நடந்தது

நம்பி நாராயணன் கெட்அப், கேரக்டரை அப்படியே உள்வாங்கி மாதவன் நடித்துள்ளது அனைத்து தரப்பினரிடமும் பாராட்டை குவித்து வருகிறது. இந்த படத்தில் மாதவனின் மனைவி ரோலில் சிம்ரன் நடித்துள்ளார். ராக்கெட்ரி படம் பாராட்டை மட்டுமின்றி, நிஜமாக நம்பி நாராயணன் விஷயத்தில் என்ன நடந்தது என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் அனைவருக்கும் துண்டி உள்ளது.

மாதவனை பாராட்டிய ரஜினி

மாதவனை பாராட்டிய ரஜினி

இந்த சமயத்தில் ராக்கெட்ரி படத்தை பார்த்து விட்டு, நடிகர் ரஜினிகாந்த், மாதவனை மனம் திறந்து பாராட்டி உள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ராக்கெட்ரி திரைப்படம், அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் என அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

டைரக்டரா ஜெயிச்சுட்டாரு

டைரக்டரா ஜெயிச்சுட்டாரு

நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம புஷன் திரு. நம்பி நாராயணன் அவர்களின் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிருபத்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுக்களும் என குறிப்பிட்டுள்ளார்.

படங்களை பாராட்டும் ரஜினி

படங்களை பாராட்டும் ரஜினி

சமீபத்தில் கமலின் விக்ரம், சிவகார்த்திகேயன் நடித்த டான் உள்ளிட்ட பல படங்களையும் பார்த்து விட்டு ரஜினி மனம் திறந்து பாராட்டி உள்ளார். ஆனால் ராக்கெட்ரி படத்தில் படத்தை மட்டுமின்றி மாதவனின் நடிப்பு, அவரின் இயக்கத்தையும் குறிப்பிட்டு பாராட்டி உள்ளது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

 நீங்களும் பயோபிக்கில் நடிங்க தலைவா

நீங்களும் பயோபிக்கில் நடிங்க தலைவா

ரஜினியின் இந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள், தலைவா...நீங்களும் இதே போல் ஒரு பயோபிக்கில் நடிங்க தலைவா. சும்மா அண்ணத்த, தர்பார்ன்னு புமராங் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீங்க. அண்ணாத்த கூட ஒப்பிடுகையில் தர்பார் பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது. இப்படி வெளிப்படையாக பாராட்ட ஒரு நல்ல மனசு வேணும். அது தான் அவரை சுப்பர்ஸ்டார் என்கிறார்கள் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X