சூப்பர் மாரி.. பைசன் பார்த்தேன்.. மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினிகாந்த்!

சென்னை: திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பைசன் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதாக, இயக்குநர் மாரி செல்வராஜுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், அமீர், லால், பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்

அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து 'பைசன்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் துருவ் விக்ரமின் தந்தையாக பசுபதி வழக்கம் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த படத்தின் கதையை எழுதும் போதே இந்த கதாபாத்திரத்திற்கு பசுபதி தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரின் பெயரையே போட்டே எழுதியதாக மாரிசெல்வராஜ் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். அதே போல அமீர் இப்படத்தில் பாண்டிய ராஜன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

bison kaalamadan Mari selvaraj Rajinikanth
Photo Credit:

வசூலை அள்ளும் பைசன்: பைசன் திரைப்படம் 17ந் தேதி தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற வருகிறது. படம் வெளியாகி 5 நாட்கள் ஆகி உள்ள நிலையில், படம் உலக அளவில், ₹22.1டி கோடியை எட்டியுள்ளது. வார இறுதி நாட்களில் இந்தப் படம் குறிப்பிடத்தக்க வகையில் வசூலை அள்ளி விரைவில் ரூ.100 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் பல வகையான விமர்சனத்தை சந்தித்து வரும் போதும், படத்தை பார்த்த இயக்குநர்கள் லிங்குசாமி, வசந்தபாலன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் படத்தையும், துருவ் விக்ரமின் நடிக்கையும் பாராட்டினார்கள்.

சூப்பர் மாரி: இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 'பைசன்' படத்தை பார்த்து பாராட்டியிருக்கிறார். இந்த தகவலை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சூப்பர் மாரி... சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் என்றார். சூப்பர் ஸ்டார் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X