»   »  சமூகத்துக்கு தேவையான படம்! - அறம் படத்துக்கு ரஜினிகாந்த் பாராட்டு

சமூகத்துக்கு தேவையான படம்! - அறம் படத்துக்கு ரஜினிகாந்த் பாராட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அறம் படத்தைப் பார்த்து பாராட்டுத் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியாகியுள்ள அறம் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்துள்ளன.

Rajinikanth praises Aramm

இந்தப் படத்தைப் பார்த்த திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் படத்தைப் பாராட்டியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்துக்கும் இந்தப் படத்தை சிறப்புக் காட்சியாகப் போட்டுக் காட்டினர். படம் பார்த்த அவர் இயக்குநர் கோபி நயினார், நடித்த நயன்தாரா மற்றும் குழுவினரைப் பாராட்டினார்.

Rajinikanth praises Aramm

சமூகத்துக்கு மிகவும் தேவையான படம் அறம் என்று அவர் குறிப்பிட்டார்.

ரஜினியின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ள தயாரிப்பாளர் கே ஜே ராஜேஷ், இந்தப் பாராட்டு மிகப் பெரிய உற்சாகத்தைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Rajinikanth praises Aramm
English summary
Rajinikanth has watched Aramm movie and congratulated the crew

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil