»   »  'அற்புதம்... அற்புதம்...' - விக்ரம் வேதா படத்துக்கு ரஜினி பாராட்டு!

'அற்புதம்... அற்புதம்...' - விக்ரம் வேதா படத்துக்கு ரஜினி பாராட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டல்லடித்த திரையரங்குகளுக்கு மீண்டும் மக்களை வரவழைத்த படம் எனக் கொண்டாடப்படும் விக்ரம் வேதா படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பார்த்துவிட்டார்.

விஜய் சேதுபதி, மாதவன், கதிர், வரலெட்சுமி சரத்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்த படம் விக்ரம் வேதா. கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல பாராட்டுகளுடன் ஓடிக் கொண்டுள்ளது.

Rajinikanth praises Vikram Vedha

புஷ்கர் - காயத்ரி இரட்டையர் இயக்கிய இந்தப் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி சமீபத்தில் பார்த்தார்.

படம் பார்த்த அவர், "அற்புதம்... அற்புதம்... மிக நல்ல படம்" என்று இயக்குநர்களிடம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "க்ளாஸாக எடுக்கப்பட்டுள்ள மாஸ் படம் இது," என்றும் தெரிவித்துள்ளார்.

இது புஷ்கர் காயத்ரிக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

"இன்னும் ரொம்ப நாட்களுக்கு எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாராட்டு இதுதான். சூப்பர் ஸ்டார் ரஜினியின் இந்தப் பாராட்டைவிட வேறொன்றும் பெரிதில்லை," என்று புஷ்கர் காயத்ரி தெரிவித்துள்ளனர்.

English summary
Superstar Rajinikanth has watched and praised Vikram Vedha movie
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil