»   »  ரஜினிகாந்த் - எஸ்எஸ் ராஜமௌலி.... புதுப்பட அறிவிப்பு எப்போது?

ரஜினிகாந்த் - எஸ்எஸ் ராஜமௌலி.... புதுப்பட அறிவிப்பு எப்போது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியானபோதே, இந்தப் படம் முடிந்ததும் ரஜினியுடன்தான் இணைவார் ராஜமௌலி என்று பேச்சுகள் கிளம்பின.

அதற்கு மேலும் வலு சேர்ப்பதுபோல, 'ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க எப்போதும் தயார்' என ரஜினியும், 'நான் தமிழில் நேரடியாகப் படம் இயக்கினால், அது ரஜினிகாந்த் நடிக்கும் படமாகத்தான் இருக்கும்' என்று ராஜமௌலியும் கூறியிருந்தனர்.

Rajinikanth - Rajamouli joins soon?

இப்போது பாகுபலி 2 வெளியானதும், மீண்டும் ரஜினி - ராஜமௌலி படம் குறித்த பேச்சுகள் கிளம்பியுள்ளன. இந்த முறை இருவரும் இணையும் படத்தின் அறிவிப்பு வரை போயிருக்கிறது.

ரஜினிக்குப் பொருத்தமான கதை ஒன்றைத் தயார் செய்யப் போவதாக ஏற்கெனவே ராஜமௌலியின் தந்தையும் பாகுபலியின் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் கூறியிருந்தார். இப்போது அந்தக் கதை விவாதம் நடைபெறுவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு மட்டும் வெளியானால் உலக சினிமாவே பரபரக்கும் என்பதில் மாற்றுக் கருத்திருக்காது!

English summary
Sources say that director Rajamouli may join with Superstar Rajinikanth and the official announcement is expecting soon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos