»   »  தரமணி படப் பாடல்களை வெளியிடுகிறார் ரஜினிகாந்த்!

தரமணி படப் பாடல்களை வெளியிடுகிறார் ரஜினிகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் ராம் படத்தின் பாடல்களை நாளை வெளியிடவிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

தங்க மீன்கள் படத்துக்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் தரமணி. வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் தன் சொந்தக் குரலில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் ஆன்ட்ரியா.

Rajinikanth to release Tharamani songs

படம் முன்பே வரவேண்டியது. ஆனால் வெளியாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. இதற்கு இடையில் இன்னொரு படத்தையே ஆரம்பித்துவிட்டார் ராம்.

இந்த நிலையில் மீண்டும் தரமணி வெளியாகும் சூழல் உருவாகியுள்ளது.

Rajinikanth to release Tharamani songs

இந்தப் படத்தின் பாடல்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை வெளியிடவுள்ளார். மேலும் படத்தின் 2-வது டீசரும் நாளை வெளியாகவிருக்கிறது. ரஜினி பாடல்களை வெளியிடும் செய்து இந்தப் படத்துக்கு பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது.

படத்தின் புதிய போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளன.

English summary
Rajinikanth will be released the audio of Ram's long delayed Tharamani movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil