»   »  ரஜினியின் பணிவை கண்டு வியக்கிறேன், மதிக்கிறேன்: முன்னாள் சாக்லேட் பாய் நடிகர்

ரஜினியின் பணிவை கண்டு வியக்கிறேன், மதிக்கிறேன்: முன்னாள் சாக்லேட் பாய் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பணிவான குணத்தை கண்டு மதிப்பதாக பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் தெரிவித்துள்ளார்.

கபாலி படம் சூப்பர் ஹிட்டான சந்தோஷத்தில் உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் படம் வெளியானபோது அமெரிக்காவில் இருந்தார். அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் பார்த்தார் ரஜினி.


தியேட்டருக்கு வந்த ரஜினியை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டனர்.


ஓய்வு

ஓய்வு

கபாலி படத்திற்காக ஓடியோடி நடித்த ரஜினி டயர்டாகிவிட்டார். இதனால் தான் அவர் அமெரிக்காவில் சில நாட்கள் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு நாடு திரும்பியுள்ளார்.


விமான நிலையம்

விமான நிலையம்

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ரஜினி விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும்போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு அவரின் பணிவை மதிப்பதாக பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் தெரிவித்துள்ளார்.


மதிக்கிறேன்

ரிஷி கபூர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, பெரிய சூப்பர் ஸ்டாரின் எளிமை குணம். இந்தியாவுக்கு கிளம்ப அமெரிக்க விமான நிலையத்தில் வரிசையில் நிற்கிறார். உங்களின் பணிவை மதிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


எளிமை

எளிமை

ரஜினிகாந்தின் எளிமை, பணிவு ரிஷி கபூர் சொல்லித் தான் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று இல்லை. ஏற்கனவே அவரது எளிமை, பணிவு பற்றி அவரது ரசிகர்களுக்கும், ரசிகர்கள் அல்லாதவர்களுக்கும் தெரியும்.


அமெரிக்க சாலைகள்

அமெரிக்க சாலைகள்

அமெரிக்காவில் தங்கியிருந்தபோது ரஜினிகாந்த் யார் துணையும் இன்றி சாலைகளில் தனியாக வாக்கிங் சென்றார். சிலர் அவரை அடையாளம் கண்டு வாவ், சூப்பர் ஸ்டார்டா, கபாலிடா என்று கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Bollywood actor Rishi Kapoor tweeted that,' Simplicity of a huge superstar.Checking in at at an airport in the US for India.Respect for your humility- Rajnikant'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil