»   »  அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி: ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி: ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் முன்கூட்டியே ஊர் திரும்பியதுடன் ரசிகர்களை சந்தித்து பேசினார்.

ஷங்கரின் 2.0 படத்தில் நடித்துக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு குட்டி பிரேக் எடுத்துக் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றார்.

அவருக்கு துணையாக அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் சென்றார்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் தங்கி மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்ட ரஜினிகாந்த் சனிக்கிழமை தனது மகளுடன் ஊர் திரும்பினார். அதிகாலை 4 மணிக்கு அவர் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

ஓய்வு

ஓய்வு

அமெரிக்காவில் இருந்து ஊர் திரும்பிய ரஜினிகாந்த் நேற்று முழுவதும் ஓய்வு எடுத்தார். ரஜினிகாந்த் சென்னை திரும்பிய செய்தி அறிந்த ரசிகர்கள் அவருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்க போயஸ் கார்டனுக்கு வந்தனர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ரசிகர்கள் தனது வீட்டு வாசலில் வந்து நிற்பதை அறிந்த ரஜினிகாந்த் காலை 10.30 மணிக்கு வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார். ரஜினியை பார்த்த ரசிகர்கள் குதூகலமாகிவிட்டனர்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

ரசிகர்கள் ரஜினியுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். ரசிகர்களுடன் 10 நிமிடம் செலவு செய்த ரஜினி மீண்டும் வீட்டிற்குள் சென்றுவிட்டார். ரஜினி தீபாவளியை அமெரிக்காவில் கொண்டாடுவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் ஊர் திரும்பியுள்ளார்.

English summary
Rajinikanth has returned from the USA after medical check up. He returned on saturday and met fans who gathered outside his residence.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil