ரஜினியின் திருமணத்தில் வந்த சிக்கல்.. உடனே எம்ஜிஆர் செய்த சூப்பர் சம்பவம்.. செம பாசமா இருந்திருக்காரே

சென்னை: ரஜினிக்கு இப்போது 74 வயது ஆகிறது. இந்த வயதிலும் ஓயாமல் உழைத்துவரும் அவர் இப்போது ஜெயிலர் 2 படத்தின் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். இப்படத்தை முடித்துவிட்டு கமலுடன் சேர்ந்து ஒரு படம், சுந்தர். சி இயக்கத்தில் ஒரு படம் என பிஸியான லைன் அப்பை வைத்திருக்கிறார். இந்நிலையில் அவர் திருமணத்தின்போது எழுந்த சிக்கலையும் அதை எம்ஜிஆர் தீர்த்துவைத்த சம்பவத்தையும் பார்க்கலாம்.

பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட ரஜினிகாந்த் கடந்த பல வருடங்களாக டாப் நடிகராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு பலரும் ஆசைப்பட்டாலும் ரஜினியை தாண்டி அந்த இடத்தை பிடிக்க முடியவில்லை. இதற்கு ஒரே காரணம் ரஜினியின் ஓயாத உழைப்புதான்.74 வயதிலும் மும்முரமாக பணியாற்று வரும் அவர் இப்போது ஜெயிலர் 2 படத்தில் தனது கவனத்தை செலுத்தியிருக்கிறார்.

இதில் எழுந்துவிடுவார்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த கூலி படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்த அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. எனவே அந்த ஏமாற்றத்தை இதில் போக்கிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். தற்போது படத்தின் ஷூட்டிங் கோவாவில் நடந்துவருகிறது. நிச்சயம் முதல் பாகம் போன்றே இரண்டாவது பாகத்திலும் தரமான சம்பவத்தை நெல்சனும், ரஜினியும் செய்வார்கள் என்பது கோலிவுட்டின் ஆரூடம்.

Rajinikanth reveals how MGR solved a major hurdle during his marriage to Latha
Photo Credit:

அடுத்த படங்கள்: ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு சுந்தர். சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் இரண்டாவது வாரத்துக்குள் வரலாம் என்று தெரிகிறது. அதுதவிர்த்து கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். அநேகமாக அப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினியின் திருமணத்துக்கு வந்த சிக்கல்: சூழல் இப்படி இருக்க ரஜினியின் திருமணம்போது எழுந்த சிக்கல் குறித்தும், அதை எம்ஜிஆர் தீர்த்து வைத்தது குறித்தும் பார்க்கலாம். அதாவது ஒரு விழாவில் ரஜினியை பார்த்த எம்ஜிஆர், எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறாய். சீக்கிரம் திருமணம் செய்துகொள் உனக்கு வேண்டுமானால் நான் பெண் பார்க்கிறேன் என சொன்னாராம். ரஜினியும் பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்து லதாவை காதலித்து மனைவியாக்க முடிவு செய்துவிட்டாராம்.

எம்ஜிஆர் செய்தது: ஆனால் ரஜினி சினிமாக்காரர் என்பதால் அவருக்கு பெண் தர லதாவின் தந்தை பயப்பட்டாராம். தான் பெண் பார்த்திருக்கும் விஷயத்தை எம்ஜிஆரிடம் ரஜினி சொல்லும்போது கூடவே இந்த சிக்கலையும் சொல்லியிருக்கிறார். உடனே லதாவின் தந்தைக்கு ஃபோன் செய்த எம்ஜிஆர், 'ரஜினிக்கு ஏன் பெண் தர பயப்படுகிறீர்கள். ரஜினிகாந்த் மிகச்சிறந்த பையன். நீங்கள் தைரியமாக அவருக்கு உங்கள் மகளை கட்டி வைக்கலாம்' என சொன்னாராம். அதற்கு பிறகுதான் தைரியமாக லதாவை கொடுத்தாராம் அவரது தந்தை. இதனை ரஜினியே பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X