»   »  வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் முதல் தோற்றம்!

வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் முதல் தோற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் இன்று மும்பையில் நடந்த பிரமாண்ட விழாவில் வெளியிடப்பட்டது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம் 2.0. சூப்பர் ஸ்டார் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லனாக அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர்.

Rajinikanth's 2.0 first look launched

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் தோற்றம் இன்று மாலை மும்பையில் உள்ள யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டுடியோவில் வெளியிடப்பட்டது.

மிக பிரமாண்டமாகவும், வண்ணமயமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவை பிரபல இந்திப் பட இயக்குநரும், 2.0-வை இந்தியில் வெளியிடும் உரிமை பெற்றவருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார்.

Rajinikanth's 2.0 first look launched

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிட்டி வேடம், அக்ஷய் குமாரின் வில்லத் தோற்றம் போன்றவை முதல் தோற்ற படங்களாக வெளியிடப்பட்டன. அதையே ஒரு சின்ன டீசராக 3 டியில் காட்டினார்கள்.

பொதுவாக இந்தியாவில் தயாராகும் 3 டி படங்கள் சாதாரணமாக எடுக்கப்பட்டு, பின்னர் 3டி க்கு மாற்றப்படும். ஆனால் ரஜினியின் 2.0 மட்டும் முழுக்க முழுக்க 3டியிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்படி படமாகும் முதல் இந்தியப் படம் 2.0-தான் என்பதை மேடையில் அறிவித்தார்கள்.

English summary
Superstar Rajinikanth's 2.0 movie first look has been launched at Mumbai today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil