»   »  தீபாவளி நாளில் ரஜினியின் 2.ஓ இசை வெளியீடு...!

தீபாவளி நாளில் ரஜினியின் 2.ஓ இசை வெளியீடு...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்தின் '2.0' படத்தின் இசைவெளியீட்டுத் தேதி குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் தீபாவளி தினத்தில் படத்தின் இசை பிரமாண்டமான விழாவில் வெளியாகவிருக்கிறது. இசை வெளியீட்டை சென்னையிலோ மும்பையிலோ நடத்தாமல், முதல் முறையாக துபாயில் நடத்தப் போகிறார்களாம்.

எந்திரன் 2-ம் பாகம்

எந்திரன் 2-ம் பாகம்

ரஜினிகாந்த், ‘எந்திரன்' இரண்டாம் பாகமான ‘2.0' படத்திலும், நடித்து முடித்துள்ளார். இந்த படம் எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள்.

பாகுபலியை விட சிறப்பாக...

பாகுபலியை விட சிறப்பாக...

‘2.0' எந்திர மனிதன் சம்பந்தமான கதை என்பதால் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இடம்பெறுகிறது. சமீபத்தில் வெளியான பாகுபலி-2 படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன. அதேபோல் ‘2.0' படத்திலும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக கிராபிக்சை புகுத்த வேண்டும் என்பதில் இயக்குநர் ஷங்கர் தீவிரமாக இருக்கிறார்.

இறுதிப் பணிகள்

இறுதிப் பணிகள்

இதற்கான பணிகள் வெளிநாட்டு நிபுணர்களை வைத்து சென்னையில் உள்ள பல்வேறு ஸ்டூடியோக்களில் இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த படத்துக்கான ‘டப்பிங்' பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. ரஜினிகாந்த் 3 நாட்களில் ‘டப்பிங்' பேசி முடித்து விட்டார்.

ரஹ்மான்

ரஹ்மான்

அடுத்த கட்டமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இசைகோர்ப்பு பணிகளை தொடங்கி உள்ளார். விரைவில் இந்த படத்தின் பாடல்களை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நட்சத்திரங்கள்

நட்சத்திரங்கள்

இந்த விழாவில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்ட படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். இந்தி நடிகர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துபாயில்

துபாயில்

இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியை துபாயில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இன்னும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தீபாவளி நாளில்

தீபாவளி நாளில்

ஜனவரி மாதம் படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தின் இசை தீபாவளியன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

ட்ரைலர்

ட்ரைலர்

2.0 படத்தின் டிரைலர், ரஜினிகாந்த் பிறந்தநாளான டிசம்பர் 12 ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
Rajinikanth's magnum opus 2.O audio release will be held on Diwali day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil