»   »  அக்டோபரில் ஆடியோ... நவம்பரில் டீசர்... டிசம்பரில் ட்ரைலர்... இது ரஜினியின் 2.ஓ அப்டேட்!

அக்டோபரில் ஆடியோ... நவம்பரில் டீசர்... டிசம்பரில் ட்ரைலர்... இது ரஜினியின் 2.ஓ அப்டேட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடித்து வரும் 2.ஓ படத்தின் இசை வெளியீடு, டீசர் மற்றும் ட்ரைலர் ரிலீஸ் குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் லைகா நிர்வாகி ராஜு மகாலிங்கம்.

ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் 2.ஓ. லைகா நிறுவனம் ரூ 400 கோடிக்கும் மேல் செலவழித்து உருவாக்கி வரும் இந்தியாவின் காஸ்ட்லி படம் இது. ஷங்கர் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. ஒரே ஒரு டூயட் பாடல் காட்சி மட்டும் இம்மாதம் படமாக்கப்பட உள்ளது.

லைகா அறிவிப்பு

லைகா அறிவிப்பு

இந்தப் படத்தின் விளம்பரப் பணிகளை ஏற்கெனவே உலகளாவிய அளவில் தொடங்கிவிட்டது லைகா நிறுவனம். ஹாலிவுட்டிலும், பிரிட்டனிலும் படத்தின் விளம்பரம் பொறித்த வெப்பக் காற்று பலூன்களை பறக்க விட்டுள்ளனர். இந்த நிலையில் படத்தின் இசை வெளியீடு, டீசர் மற்றும் ட்ரைலர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் லைகா நிர்வாகி ராஜு மகாலிங்கம்.

துபாயில்..

துபாயில்..

2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள். இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள், கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

டீசர் வெளியீடு

டீசர் வெளியீடு

படத்தின் முதல் டீசரை வரும் நவம்பர் மாதம் வெளியிடவிருக்கின்றனர். ஹைதராபாத் நகரில் கோலாகலமாக இந்த வெளியீட்டு விழா நடக்கிறது.

ட்ரைலர்

ட்ரைலர்

முத்தாய்ப்பாக ட்ரைலர் வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சி சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய திரையுலகமே பங்கேற்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

இந்த மூன்று நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து மூன்று மாதங்களில் நடக்கவிருப்பதை ராஜு மகாலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனவரி 25

ஜனவரி 25

வரும் 2018- ஜனவரி 25-ம் தேதி உலகெங்கும் 20 ஆயிரம் அரங்குகளில் 2.ஓ படத்தை வெளியிடப் போவதாக லைகா ஏற்கெனவே அறிவித்துள்ளது.

English summary
Rajinikanth's magnum opus 2.O audio, teaser and trailer release dates announced by Lyca officially

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil