»   »  வெளியானது 2.ஓ 3டி மேக்கிங் ட்ரைலர்... வாவ்... ஆர்வத்தைத் தூண்டும் 'சிட்டி' ரஜினி!

வெளியானது 2.ஓ 3டி மேக்கிங் ட்ரைலர்... வாவ்... ஆர்வத்தைத் தூண்டும் 'சிட்டி' ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் பிரமாண்டப் படம் என்ற பெருமையோடு வெளியாகவிருக்கும் ரஜினியின் 2.ஓ படத்தின் மூன்றரை நிமிட 3டி உருவாக்க முன்னோட்டப் படம் இன்று மாலை வெளியானது.

இந்த முன்னோட்டத்தில் இளமையும், துடிப்புமாக வரும் ரஜினிகாந்த், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.

Rajinikanth's 2.O making trailer released

லைகா நிறுவனம் ரூ 400 கோடி செலவில் தயாரித்து வரும் படம் இது. ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு வில்லனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். எமி ஜாக்ஸன் நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க லேட்டஸ்ட் 3 டி கேமிராவில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படி படமாக்கப்பட்டுள்ள முதல் படம் 2.ஓதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படம், 3டியில் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை விளக்கும் முன்னோட்டப் படம் சற்று முன் யு ட்யூபில் வெளியிடப்பட்டது.

Rajinikanth's 2.O making trailer released

3 நிமிடம் 35 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில், 2.ஓவை ஏன் 3டியில் எடுத்தார்கள், அதில் இருந்த சவால்கள் குறித்து ரஜினிகாந்த், ஷங்கர், அக்ஷய் குமார், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பணியாற்றிய ஹாலிவுட் கலைஞர்கள் சிலரும் சுருக்கமாகப் பேசுகின்றனர்.

Rajinikanth's 2.O making trailer released

"இந்தக் கதைக்கபு 3டி தேவைப்பட்டது. அந்த தொழில் நுட்பத்தை அவர் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். படத்தில் ஒரு காட்சியை நானே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தேன், அத்தனை வியப்பாக உள்ளது," என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.

படத்தில் விஞ்ஞானி வசீகரன், ரோபோ சிட்டி என இரு வேடங்களில் ரஜினி வருகிறார். எந்திரனில் பார்த்த ரஜினியைவிட இந்தப் படத்தில் இன்னும் இளமையாகவும் ஸ்டைலாகவும் தோன்றுகிறார். மிக ஆபத்தான சண்டைக் காட்சிகளில் கயிற்றில் தொங்கியபடி அவர் சண்டையிடுகிறார்.

English summary
The 3.35 minute making trailer of Rajinikanth's 2.O has been released today

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil