»   »  இந்திய சினிமாவில் புதிய வரலாறு படைத்தது ரஜினியின் 2.ஓ... ரூ 500 கோடியைத் தாண்டும் வியாபாரம்!

இந்திய சினிமாவில் புதிய வரலாறு படைத்தது ரஜினியின் 2.ஓ... ரூ 500 கோடியைத் தாண்டும் வியாபாரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக பெரிய படங்கள், குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள், வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ 100 கோடி வசூலைத் தாண்டி சாதனைப் படைக்கும்.

ஆனால் முதல் முறையாக ரஜினியின் திரைப்படம் ஒன்றின் தொலைக்காட்சி உரிமை விலையே ரூ 100 கோடியைத் தாண்டி புதிய சரித்திரம் படைத்துள்ளது. அதுதான் 2.ஓ.

இந்தப் படத்தை ஜீ டிவி அனைத்து மொழி தொலைக்காட்சி உரிமையையும் ரூ 110 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்தத் தகவல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajinikanth's 2.O sets a new record in business

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே இதுவரை எந்த மொழிப் படத்துக்கும் இத்தனை பெரிய தொகை கொடுக்கப்பட்டதில்லை. அந்த சாதனையையும் சூப்பர் ஸ்டாரின் படம்தான் செய்திருக்கிறது.

ஷங்கர் இயக்கும் 2.ஓ படத்தின் பட்ஜெட் ரூ 350 கோடி. முதல் வரவாக, படத்தின் டீசரோ, ட்ரைலரோ வெளியாகும் முன்பே ரூ 110 கோடியை தயாரிப்பாளர்களான லைக்கா புரொடக்ஷன்ஸ் சம்பாதித்துவிட்டது.

இதன் உலக உரிமை ரூ 100 கோடியைத் தாண்டிப் போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தி, தெலுங்கு, தமிழில் எப்படியும் ரூ 250 கோடி வரை விலைபோகும் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் புள்ளிகள்.

இன்னும் ஆடியோ உரிமை, காலர் டோன் உள்ளிட்ட டிஜிட்டல் உரிமை, ஸ்பான்சர்கள் என நிறைய வருவாய் வழிகள் மிச்சமிருக்கின்றன.

ஆக, எந்திரன் 2 எனும் 2.ஓ, வெளியாகும் முன்பே ரூ 500 கோடிக்கும் மேல் குவிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

English summary
Box office experts expect that Rajinikanth's 2.O business will cross Rs 500 cr easily.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil