»   »  தமிழ் புத்தாண்டில் சூப்பர் ஸ்டாரின் '2.0' டீசர்... அடுத்த சாதனைக்கு தயாராகும் ரசிகர்கள்!

தமிழ் புத்தாண்டில் சூப்பர் ஸ்டாரின் '2.0' டீசர்... அடுத்த சாதனைக்கு தயாராகும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்திய திரையுலகில் எந்தப் படத்தின் டீசருக்கும் கிடைக்காத வரவேற்பு சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலிக்குக் கிடைத்தது. மூன்று கோடிக்கும் அதிகமான பார்வைகள், 5 லட்சம் விருப்பங்கள் என கலக்கியது.

அடுத்து அந்த சாதனையை நெருங்கும் நிலையில்கூட எந்தப் படத்தின் டீசரும் இல்லை. பாகுபலி 2 ஒருவேளை நெருங்கலாம்... அல்லது தாண்டலாம்.


Rajinikanth's 2.O teaser from April 14th

பாகுபலி ஏப்ரலில் ரிலீசாகிறது. அதே ஏப்ரலில் ரஜினியின் எந்திரன் 2 படம் வெளியாகிறது.


லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.


இந்நிலையில், படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ஜனவரி 30-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.


2.0 படத்தின் டீசரை தமிழ் புத்தாண்டு அன்று (ஏப்ரல் 14)-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.


படம் தீபாவளி விருந்தாக அக்டோபர் 19-ம் தேதி வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் ஏற்கெனவே கூறியது நினைவிருக்கலாம்.

English summary
The first teaser of Rajinikanth's 2.O will be released on April 14the.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil