twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2.0 அப்டேட்ஸ்... உலகம் முழுவதும் ரிலீஸ்.. 3டி தியேட்டரில் மட்டுமே பார்க்க முடியும்

    By Shankar
    |

    ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) புரமோஷன்கள் சூடுபிடித்துள்ளன. இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.

    ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகி - எமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வசனம் - ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும் முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.

    2.0 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிவருவதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன.

    மெகா விளம்பரம்

    மெகா விளம்பரம்

    இந்நிலையில் இப்படத்தின் விளம்பரப் பணிகளை முடுக்கியுள்ளது லைக்கா நிறுவனம். இப்படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக லைக்கா நிறுவனத்தின் தலைமைச் செயல் நிர்வாகியான ராஜூ மகாலிங்கம் சமீபத்தில் அறிவித்தார்.

    2.0 படம் 3 டியில் வெளியாவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் லைகா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம் கூறிய கூடுதல் தகவல்கள்:

    "படத்தின் பட்ஜெட், ரூ. 350 கோடியிலிருந்து ரூ. 400 கோடியாக அதிகரித்துள்ளது. கடைசியில் 3டி தொழில்நுட்பத்துக்கு மாற்றுவதற்குப் பதிலாக இந்தப் படம் ஆரம்பத்திலிருந்தே 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்படுகிறது.

    முதல் நேரடி 3 டி படம்

    முதல் நேரடி 3 டி படம்

    இந்தியாவின் முதல் நேரடி 3டி படம் 2.0 தான். இதற்கு முன் வந்த படங்கள் சாதாரணமாகப் படமாக்கப்பட்டு பின் 3 டிக்கு மாற்றப்பட்டவை.

    20000 அரங்குகள்

    20000 அரங்குகள்

    சீனாவில் 40,000க்கும் அதிகமான திரையரங்குகள் உள்ளன. இந்த வருடக் கடைசியில் இந்த எண்ணிக்கை 50,000 ஆக அதிகரிக்கும். அதில் பாதிக்கு மேல் 3டி திரையரங்குகள். சீனாவில் இருபதாயிரத்துக்கும் அதிகமான 3டி திரையரங்குகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் ஆயிரத்து ஐந்நூறு திரையரங்குகளே உள்ளன. இந்தியாவில் இன்னும் அதிகமான 3டி திரையரங்குகள் உருவாகவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    20 ஆயிரத்துக்கும் அதிகமான அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

    இப்போதைக்கு நோ புரொடக்ஷன்

    இப்போதைக்கு நோ புரொடக்ஷன்

    தமிழகத்தில் நிலவும் ஜிஎஸ்டி-கேளிக்கை வரி விவகாரத்தால் லண்டனில் உள்ள எங்கள் தலைமை ஒரு முடிவு எடுத்துள்ளது. ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாகத் தெளிவான நிலை உருவாகும்வரை இந்தியாவில் படங்கள் தயாரிப்பதை நிறுத்தவுள்ளோம்," என்று கூறியுள்ளார்.

    இசை வெளியீடு

    இசை வெளியீடு

    படத்தின் இசையை வரும் அக்டோபர் மாதம் பிரமாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், கண்டிப்பாக ஜனவரி 25-ம் தேதி படத்தை வெளியிடப் போவதாகவும் ராஜூ மகாலிங்கம் தெரிவித்தார்.

    English summary
    Lyca Productions Raju Mahalingam says that Rajinikanth starrer 2.O will release in morethan 20000 theaters worldwide.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X