மீண்டும் துவங்கிய அண்ணாத்த ஷுட்டிங்...சூப்பராக மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார்
சென்னை : சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஷுட்டிங் படு சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. ரஜினியின் மற்ற படங்களைப் போல் இந்த படமும் அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டி, கவனத்தை ஈர்த்து வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் தீபாவளி ரிலீசுக்காக தயாராகி வருகிறது. நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சதீஷ் என முன்னணி ஸ்டார்கள் பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்து வருகிறார். ரஜினி படத்திற்கு இமான் இசை அமைப்பது இது தான் முதல் முறை.

தாமதமாகும் கொல்கத்தா ஷுட்டிங்
அண்ணாத்த படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங் கொல்கத்தாவில் 4 நாட்கள் நடக்க உள்ளதாகவும், இதற்காக ரஜினி மேற்குவங்கம் செல்ல உள்ளதாகவும் சமீபத்தில் கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் கொல்கத்தாவில் நடத்தப்பட வேண்டிய ஷுட்டிங் தாமதமாகிறதாம்.

ஆக்டிவாக வந்த ரஜினி
இதில் ரஜினி நடிக்க வேண்டிய சில சீன்கள் நேற்றும் இன்றும் படமாக்கப்படுகிறது. அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு குடும்பத்துடன் ஓய்வுவெடுத்து திரும்பி வந்த கையோடு மீண்டும் தாத்தா ஆக போகும் செய்தி கிடைத்த சந்தோஷத்தில் படு ஆக்டிவாக ஷுட்டிங்கிற்கு வந்துள்ளார் நம்ம சூப்பர் ஸ்டார்.

சென்னை ஷுட்டிங்கில் ரஜினி
இதனால் கொல்கத்தாவில் எடுக்கப்பட வேண்டிய சீன்களுக்கு முன்னதாக சென்னையில் ஸ்டூடியோவில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக அண்ணாத்த படத்தின் ஷுட்டிங் நேற்று சென்னையில் துவங்கப்பட்டது.

கொல்கத்தா போகிறாரா ரஜினி
சென்னையில் ஷுட்டிங் முடிந்த பிறகு கொல்கத்தா ஷுட்டிங்கை தொடங்க டைரக்டர் முடிவு செய்துள்ளார். சில நடிகர்களுடன் சென்று கொல்கத்தா காட்சிகளை படமாக்க டைரக்டர் முடிவு செய்துள்ளார். அதனால் ரஜினி கொல்கத்தா செல்கிறாரா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











