twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாட்ஷா படத்தின் கதை எப்படி உருவானது தெரியுமா? அமிதாப்புக்கும் கோவிந்தாவுக்கும் அதில் என்ன தொடர்பு?

    |

    சென்னை: பாட்ஷா படத்தின் கதை எப்படி உருவானது என்பது குறித்தும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும், கோவிந்தாவுக்கும் அதில் இருக்கும் தொடர்பு குறித்த தகவல் குறித்து இங்கே காண்போம்.

    Recommended Video

    Rajinikanth early morning walking in Kelampakkam

    ரஜினிகாந்த் சினிமா உலகிற்கு வந்து 45 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் ஏகப்பட்ட விஷயங்களை செய்து வருகின்றனர்.

    நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை.. சூர்யாவை பாராட்டி.. மீரா மிதுனை டேமேஜ் செய்த வைரமுத்து! நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை.. சூர்யாவை பாராட்டி.. மீரா மிதுனை டேமேஜ் செய்த வைரமுத்து!

    45 வருட ரஜினிஸம்

    45 வருட ரஜினிஸம்

    மோகன் லால், மம்மூட்டி தொடங்கி, கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் என பல பிரபலங்களும் சமீபத்தில் 45 வருட ரஜினியின் திரை வாழ்க்கையை முன்னிட்டு சிறப்பு காமன் டிபியை எல்லாம் வெளியிட்டு இருந்தனர். தொலைக்காட்சிகளில் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் படங்களை ஒளிபரப்பி வருகின்றனர். ஸ்பெஷல் மாஷப் வீடியோக்கள் உள்ளிட்ட பல சுவாரஸ்யங்கள் சமூக வலைதளங்களை ஆட்சி செய்து வருகின்றன.

    ரொம்ப பிடிச்ச படம்

    ரொம்ப பிடிச்ச படம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏகப்பட்ட மெகா பிளாக்பஸ்டர் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்காக கொடுத்திருந்தாலும், அவருக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப பிடிச்ச படம் என்றால் அது பாட்ஷா தான். பாட்ஷா மாதிரி தங்களுக்கும் ஒரு படம் வேண்டும் என்று பல நட்சத்திர நடிகர்களும் எதிர்பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

    அமிதாப் பச்சன், கோவிந்தா கனெக்‌ஷன்

    அமிதாப் பச்சன், கோவிந்தா கனெக்‌ஷன்

    அப்படிப்பட்ட பாட்ஷா படம் உருவான கதை ஒரு சூப்பரான குட்டி ஸ்டோரியாக உள்ளது. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மற்றும் கோவிந்தா நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான ‘ஹம்' (HUM) படத்தின் ஷூட்டிங்கில் தான் பாட்ஷா படத்தின் ஒன் லைனே உருவாகி இருக்கிறது. கோவிந்தா போலீஸ் அதிகாரியாக பதவியேற்க, அவரது அண்ணனான அமிதாப் பச்சன், போலீஸ் அதிகாரிகளை தனது ஸ்டைலில் மிரட்டுவதாக காட்சிகள் பற்றிய ஆலோசனை நடைபெற்றுள்ளது. ஆனால், அந்த படத்தின் இயக்குநர் முகுல் எஸ். ஆனந்த் அந்த காட்சியை படத்தில் வைக்கவில்லையாம்.

    ரஜினி மனதில் ஆழமாக

    ரஜினி மனதில் ஆழமாக

    ஆனால், அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொண்டு இருந்ததால், அந்த ஒரு காட்சி அவர் மனதில் அழமாக ஒரு தீப்பொறி போல பதிவாகி விட்டது. பின்னர், அண்ணாமலை படத்தின் போது, சுரேஷ் கிருஷ்ணாவிடம் இந்த கதையை டெவலப் பண்ண சொல்லி உள்ளாராம் சூப்பர்ஸ்டார்.

    பாட்ஷா டைட்டில்

    பாட்ஷா டைட்டில்

    வீரா படத்தின் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் இருந்த போது, ஆறே மாதத்தில் அந்த ஒன்லைனை வைத்து, மாணிக்கம் என்றும் மும்பை டான் என்றும் இரு வேறு கதைகளை உருவாக்கி, அவற்றை ஒருங்கிணைத்து சூப்பர் ஸ்டோரியாக ரெடி செய்து விட்டார். அந்த கதைக்கு பாட்ஷா என்ற டைட்டிலை தேர்வு செய்து கொடுத்ததும் ரஜினிகாந்த் தானாம்.

    இணையான வில்லன்

    இணையான வில்லன்

    ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தை ரொம்ப பவர் ஃபுல்லாகவும் உருவாக்க சொல்லி இருந்தாராம் ரஜினிகாந்த். முதலில், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அமிதாப் பச்சனை அணுகியதாகவும், சில பல காரணங்களுக்காக மார்க் ஆண்டனி கதாபாத்திரத்தில் ரகுவரன் இறுதியானதும், அதன் பின்னர் அவருடைய நடிப்பு வரலாறு ஆனதும் தனிக்கதை.

    பஞ்ச் வசனங்கள்

    பஞ்ச் வசனங்கள்

    "உள்ளே போ", "நான் ஒரு தடவ சொன்னா", "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா", "இந்த பாட்ஷா இதை கேட்டு வேலை செய்ய மாட்டான்.. இதை கேட்டுத் தான் வேலை செய்வான்" என பேசிய ஒவ்வொரு பஞ்ச் வசனங்களும் எத்தனை காலங்கள் ஆனாலும், ரசிகர்கள் நெஞ்சில் நீங்காமல் நிறைந்திருப்பதற்கு அந்த படம் அவ்வளவு நேர்த்தியாக உருவானது தான் காரணம்.

    English summary
    Rajinikanth’s mega blockbuster movie Baasha story line developed in the sets of Amitabh Bachchan, Rajinikanth and Govinda starred Hum movie sets.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X