Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
முக்கியமான சீன்லாம் கட் பண்ணிட்டாங்க ப்ரோ... கொட்டும் மழையிலும் பாபா ரீ-ரிலீஸ் டிவிட்டர் விமர்சனம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பாபா திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ரஜினியின் சிவாஜி வெளியான நிலையில், இன்று பாபா ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக மழை கொட்டித் தீர்க்கும் நேரத்திலும், அதிகாலை 4 மணிக்கே பாபா படத்தின் FDFS பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் குவிந்தனர்.
புத்தம் புது பொலிவுடன் பாபா ரீ ரிலீஸ்... ரஜினியின் பிறந்த நாளில் காத்திருக்கும் மெகா ட்ரீட்!

பாபா ரீ-ரிலீஸ் FDFS
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஜினியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பாபா திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம், 20 வருடங்களுக்குப் பிறகு புதுப் பொலிவுடன் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்திற்கும் வழக்கம் போல அதிகாலை 4 மணிக்கு FDFS பார்க்க ரசிகர்கள் அதிகளவில் திரண்டனர்.

பாபா டிவிட்டர் விமர்சனம்
மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஆனாலும், அதனை பொருட்படுத்தாமல் பாபா படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ரீ-எடிட்டிங் செய்து வெளியாகியுள்ள பாபா படம் குறித்து தங்களது கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். அதில், 20 வருடங்களுக்குப் பிறகும் பாபா படத்தில் ரஜினி ப்ரெஷாக இருப்பதாகவும், அவரது நடிப்பு அதே எனர்ஜியுடன் இருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், ரஜினியின் மாஸ்ஸான சீன்ஸ் எல்லாமே தரமாக எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முக்கியமான சீன்ஸ்லாம் கட் பண்ணிட்டாங்க
2002ம் ஆண்டு பாபா திரைப்படம் வெளியான போது, பாமக தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ரஜினி - பாமக இடையே அரசியல் ரீதியான மோதல்கள் வெடித்தன. மேலும், பாபா படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்தும் பாமகவினர் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், தற்போது ரீ-ரிலீஸாகியுள்ள பாபா படத்தில் சில காட்சிகள் மட்டும் நீக்கப்பட்டுள்ளதாம். அதேபோல் சில காட்சிகள் முன்னும் பின்னும் ரீ-எடிட் செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

பக்கா தியேட்டர் மெட்டீரியல்
பாபா திரைப்படம் இப்போதும் பக்கா தியேட்டர் மெட்டீரியலாக வந்துள்ளது என ரஜினி ரசிகர்கள் சிலாகித்துள்ளனர். அதேபோல், ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட பாபா படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்னும் பலரோ பாபா கிளைமேக்ஸ் காட்சியில் மட்டுமே மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர். சில முக்கியமான சீன்ஸ் எல்லாம் நீக்கிவிட்டாலும் பாபா படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பாபா திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் ஆகியுள்ளதால் இது தொடர்ந்து டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.