twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் ஒரு பச்சைத் தமிழன்! - ரஜினிகாந்த் முழுப் பேச்சு

    By Shankar
    |

    நடிகர் ரஜினிகாந்த், கடந்த 4 நாட்களாக தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல் நாள் அன்று ரஜினிகாந்த் மேடையில் பேசினார். அதனைத் தொடர்ந்து அரசியல் ரீதியான பல வாத விவாதங்கள், ஹேஷ்யங்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வந்த வண்ணம் இருந்தது.

    எனவே, நிகழ்ச்சியின் கடைசி நாளான இன்று அதை தெளிவுப்படுத்தும் வகையில் சூப்பர்ஸ்டார் அவர்கள் மேடையில் பேசினார்.

    Rajinikanth's complete speech

    நிகழ்ச்சியின் போது அவர் பேசியது முழுமையாக:

    "என்னை வாழவைத்த தெய்வங்களான என் ரசிக பெருகமக்களே, ஊடக நண்பர்களே, பத்திரிக்கை நண்பர்களே அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

    முதலில் உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு ஒழுக்கமா, கட்டுப்பாடா இங்கு வந்து இருந்தது, பழகினது இதெல்லாம் பார்த்து முதல்ல என்னோட சந்தோஷத்த தெரிவிச்சிக்கிறேன்.

    இந்த ஒழுக்கம்தான் வாழ்க்கையில ரொம்ப முக்கியமானது. ஒழுக்கமில்ல சொன்ன எந்த ஒரு காரியத்திலும் நாம முன்னேற முடியாது. அந்த ஒழுக்கத்த நீங்க நல்லா கடைபிடிச்சீங்க, அதை அப்படியே எல்லா விஷயத்திலேயும் கடைபிடிக்க வேண்டும். இந்த ஒரு விழா - ரசிகர்களை சந்திக்கும் விழாவை ஏற்பாடு பண்ணி, அற்புதமாக நிர்வகித்த சுதாகருக்கு மற்றும் இவர்களுக்கு எல்லாம் நாயகனாக இருந்த என் உயிர்க்கும் மேலான முரளிபிரசாத், சிவாராம கிருஷ்ணன், பாபா அவர்களுக்கும் அனைத்து ராகவேந்திரா மண்டப ஊழியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜிம் பாய்ஸ், சிரமத்தைப் பொறுத்துக் கொண்ட அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள், போலீஸ் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    எதிர்ப்புதான் உரம்

    முதல் நாள் நான் பேசியது என் ரசிகர்களுக்கு நான் அரசியல் வந்தால் எப்படி இருக்கனும், சொன்னது. அது இவ்வளவு பெரிய சர்ச்சையா வாதப்பொருளா இருக்கும்னு நான் நினைக்கல. வாதங்கள், எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே இருக்கலாம். எதிர்ப்பு இல்லாம வாழவே முடியாது. அதுவும் அரசியல்ல எதிர்ப்புதான் மூலதனமே. வாத விவாதங்கள் இருக்கலாம், ஆனால் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கும் தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக போயிட்டாங்க. அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் எனக்கு ஒரு சின்ன வருத்தம்.

    நான் ஒரே ஒரு விஷயம் மட்டும் தெளிவு செய்ய விரும்புகிறேன். எனக்கு இப்போது 67 வயசு ஆகுது. ஆனால் 23 வருடங்கள்தான் கர்நாடகாவில் இருந்தேன், 44 ஆண்டுகள் தமிழ் நாட்டில் உங்க கூடவே வளர்ந்தேன். கர்நாடகாவில் இருந்து ஒரு மராட்டியனாகவோ, கன்னடனாகவோ வந்திருந்தா கூட நீங்க என்னை ஆதரிச்சு, பெயர், புகழ், பணம் எல்லாம் அள்ளிக் கொடுத்து என்னை நீங்க தமிழானகவே ஆக்கிட்டீங்க. எனவே நான் ஒரு பச்சைத் தமிழன். என் பெற்றோர், மூதாதையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம் ஊரில் பிறந்தவங்க, அப்டீங்கறது நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்.

    நீங்க என்னை தூக்கிப்போட்டா நான் இமயமலையில் தான் போய் விழுவேனே தவிர வேறு எந்த மாநிலத்துக்கும் போக மாட்டேன். என்னை வாழவைத்த தெய்வங்கள் என்னை மாதிரியே நல்லா இருக்கணும்னு நான் ஆசைப்படுறதல என்ன தப்புன்னு தெரியல. சரி அதுக்கு நீ என்ன சரிசெய்வது அப்படீன்னு சொன்னா. ஆமாம் இருக்காங்க, தளபதி ஸ்டாலின் அவர்கள் திறைமையான நிர்வாகி, அன்புமணி ராமதாஸ் நல்ல படிச்சவர், உலகம் முழுக்க சுற்றியவர், நல்ல திட்டங்கள் வைத்துள்ளார்கள். திருமாவளவன் தலித் மக்களுக்காக உழைக்கும் அற்புத தலைவர். சீமான், போராளி. அவர் கருத்துக்களை கேட்டு பிரம்மிச்சு போயிருக்கேன்... அது போல இன்னும் இருக்காங்க சில தேசிய கட்சிகள். ஆனால் அமைப்பு கெட்டு போயிருக்கே.
    அரசியல் பத்தி, ஜனநாயகம் பத்தி மக்களோட கண்ணோட்டம் கெட்டு போயிருக்கே. எனவே முதலில் அமைப்பு சீர்படுத்தபட வேண்டும். ஜனங்களின் மனரீதியான சிந்தனையை மாற்ற வேண்டும், அதை எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டும். அப்படியென்றால் மட்டுமே நாடு நன்றாக இருக்கும். "

    என்னை பற்றிய விமர்சனங்களுக்கு என் ரசிகர்கள் உணர்ச்சிவசப் பட வேண்டாம். ஏனென்றால் எதிர்ப்பு இருந்தால் தான் வளர்ச்சியடைய முடியும். நம்மை பற்றிய அவதூறுகள், திட்டுகள், நிந்தனைகள் எல்லாம் செடி வளர தேவையான உரம் மாதிரி, அவர்கள் நம் வளர்ச்சிக்கே உதவுகிறார்கள்.

    திட்டிய திட்டுக்கள் திட்டியவர்களுக்கே

    ஒருமுறை புத்தர் தன் சீடர்களோடு சென்றபோது, வழியில் சிலர் புத்தரை திட்டிக்கொண்டிருந்தார். அதை கேட்ட புத்தர் அமைதியாக நிற்க உடன் வந்த சீடர்களும் அமைதியாக நின்றனர். அந்த நபர் சென்ற பின், சீடர்கள் புத்தரிடம் கேட்டனர். அதற்கு புத்தர் சொன்னார், 'அவர் திட்டிக் கொட்டினார் ஆனால் நான் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே அது அவருடனையே சென்றுவிட்டது', என்று கூறினார்.

    போரின்போது அழைக்கிறேன்

    பழைய காலத்தில ராஜாக்கள் கிட்ட சைன்ய பலம் இருக்கும். லட்சக்கணக்கில் இருக்காது, ஆயிரக் கணக்கில்தான் இருக்கும். ஆனால், போர் வரும்போது நாட்டில் இருக்கும் ஆண் பிரஜைகளும் வீரர்கள் மாதிரிதான். அதுக்காகத்தான் ஜல்லிக்கட்டு, மல்யுத்தம், கபடின்னு வீர விளையாட்டுகள் வச்சிருந்தாங்க. மக்கள் இதில் பயிற்சி பெற்று முழு வீரர்களா ஆகிடுவாங்க. போர் வரும்போது படையுடன் சேர்ந்து போரிடுவாங்க.

    அதுவரை அவர்கள் தன் கடைமைகளை செயவார்கள். அது போல நாம் அனைவரும் அவரவர் கடைமைகளை இப்போது ஒழுங்காக செய்வோம். நான் என் வேலைகளைப் பார்க்கிறேன்.. நீங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள். போர் வரும்போது அழைக்கிறேன். போர்க்களத்தில் இறங்குவோம்", என்றார்.

    English summary
    Rajinikanth's full speech in fans meeting today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X