Don't Miss!
- Automobiles
தோனி கவாஸாகி பைக், கோலி பிஎம்டபிள்யூ கார்-னு சொன்னாங்களே... எல்லாம் பொய்யா!! குடும்பத்தினர் வெளியிட்ட உண்மை
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Technology
பதான் திரைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போனுடன் வரும் ஹர்திக் பாண்டியா! ட்விட்டரில் வெளியான புகைப்படம்!
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ரஜினி குடும்பத்தையும் விட்டு வைக்காத கொரோனா...ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதி
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோலிவுட், பாலிவுட், டோலிவுட்டை, மல்லுவுட்டை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோலிவுட்டில் கமல், வடிவேலு, சத்யராஜ், த்ரிஷா, அருண்விஜய் உள்ளிட்டோரை தொடர்ந்து, பாரதிராஜாவும் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் ஒரு வார சிகிச்சைக்கு பிறகு தற்போது வீடு திரும்பி இருப்பதாக நேற்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

ஐஸ்வர்யாவிற்கும் கொரோனா
இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவும் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதோடு மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தனது போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் என்னவெல்லாம் இருக்கோ
ஐஸ்வர்யா இன்று பகிர்ந்துள்ள இன்ஸ்டா போஸ்டில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்த பிறகும் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தயவு செய்து மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள். 2022 கொண்டு வந்துள்ளது. இன்னும் என்னவெல்லாம் எனக்காக வைத்திருக்கிறது என பார்ப்போம் என்று ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.

தனுஷை பிரிய முடிவு
ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருமே சமீபத்தில் தான் தாங்கள் பிரிய போவதாக அறிவித்தனர். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தாங்கள் பிரிய முடிவு செய்திருப்பதாக தங்களின் சோஷியல் மீடியாக்களில் அறிவித்திருந்தனர். இதனால் மீடியா, சோஷியல் மீடியா என எங்கு திரும்பினாலும் இவர்களின் பேச்சாக தான் இருந்தது. இவர்களின் திடீர் விவாகரத்து முடிவிற்கு என்ன காரணம் என பலவிதமான தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. அதே சமயம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இவர்கள் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஷுட்டிங்கில் பிஸி
பிரிவை அறிவித்த பிறகு தனுஷ்- ஐஸ்வர்யா இருவருமே தங்களின் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர். தனுஷ் தற்போது நடிக்கும் படங்களின் ஷுட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றிருப்பதை போல், ஐஸ்வர்யாவும் ஐதராபாத் சென்றிருந்தார். காதலர் தினத்திற்காக புதிய பாடல் ஒன்றை இயக்கும் வேலைகளில் இருந்து வந்தார் ஐஸ்வர்யா. ஜனவரி 25 ம் தேதி துவங்கி, ஜனவரி 27 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் ஷுட்டிங்கில் இருந்து வந்தார். தற்போது சென்னை திரும்பிய ஐஸ்வர்யாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி
தனுஷை பிரிவதாக போட்ட போஸ்டிற்கு பிறகு ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் வேறு எந்த போஸ்டும் போடவில்லை. சோஷியல் மீடியா பக்கத்தில் இருந்து தனது பெயரின் பின்னால் இருக்கும் தனுஷின் பெயரை கூட அவர் நீக்கவில்லை. இந்நிலையில் கையில் ட்ரிப்ஸ் ஏறிய நிலையில் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, தனக்கு கொரோனா பாதித்த தகவலை தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.