»   »  எங்க போஸ்டரை சுட்டுட்டாங்க.. "கபாலி" மீது புகார் கூறும் பாலிவுட் இர்பான்!

எங்க போஸ்டரை சுட்டுட்டாங்க.. "கபாலி" மீது புகார் கூறும் பாலிவுட் இர்பான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தின் போஸ்டர் ஒன்று, தங்களின் மதாரி பட போஸ்டரைக் காப்பி அடித்து உருவாக்கப்பட்டிருப்பதாக பாலிவுட் நடிகர் இர்பான் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் அடுத்தமாதம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், அப்படத்தின் போஸ்டர் ஒன்று புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.


அதாவது நிஷிகாந்த் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் இர்பான் கான் நடித்துள்ள இந்திப்படம் மதாரி. இப்படமும் அடுத்தமாதம் 15ம் தேதி தான் ரிலீசாக இருக்கிறது.


Rajinikanth's Film Stole Our Poster, Says Irrfan

இப்படத்தின் போஸ்டரில் இர்பானின் முகமும், அதன் வலது புறத்தில் படத்தின் பெயரும், இடப்பக்கத்தில் கட்டிடங்களும் இடம் பெற்றுள்ளன. தற்போது அதேபோன்ற ஸ்டைலில் ரஜினியின் கபாலி பட போஸ்டர் ஒன்றும் இணையத்தில் உலா வருகிறது.


இது தொடர்பாக இர்பான் கூறுகையில், "எங்கள் படப்போஸ்டரைத் தழுவி இந்த கபாலி போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இது ஒரு பெரிய விஷயமல்ல. எங்க போஸ்டரையும் பாருங்க, அந்த போஸ்டரையும் பாருங்க. அதேபோல எங்க படத்தையும் பாருங்க, கபாலியையும் பாருங்க. எங்கள் இருவரது படங்களையுமே மக்கள் பார்க்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்' எனத் தெரிவித்துள்ளார்.


ஆனால், இது படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ போஸ்டர் அல்ல. ரஜினி ரசிகர்களால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Irrfan Khan says superstar Rajinikanth's film Kabali has stolen the poster of his upcoming film Madaari but said it was no big deal and urged fans to go for both films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil