»   »  கடலூரில் தொடங்கியது ரஜினியின் அடுத்த கட்ட வெள்ள நிவாரணம்!

கடலூரில் தொடங்கியது ரஜினியின் அடுத்த கட்ட வெள்ள நிவாரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு அடுத்த கட்ட வெள்ள நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுதாகர் மூலம் வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.

Rajinikanth's flood relief reaches next stage in Cuddalore

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்விற்கு தேவையான நிவாரணப் பொருள்களை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் விநியோகித்து வருகின்றனர்.

Rajinikanth's flood relief reaches next stage in Cuddalore

சென்னை மற்றும் புற நகர் பகுதிகள், தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், போர்வை, பாய், துணிமணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள், மற்றும் பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்றவற்றை விநியோகித்து வருகின்றனர்.

Rajinikanth's flood relief reaches next stage in Cuddalore

இன்று காலை 8 மணியளவில் நிவாரண பொருட்கள் வழங்குவதை ரஜினிகாந்தின் நண்பரும் ரசிகர் மன்றங்களின் தலைமைப் பொறுப்பாளருமான சுதாகர் தொடங்கி வைத்தார்.

Rajinikanth's flood relief reaches next stage in Cuddalore

கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த நிவாரணப் பொருள்களை வழங்க ரஜினி அறிவுறுத்தியுள்ளார்.

English summary
Rajinikanth is distributing flood relief materials for flood affected Cuddalore people today through his friend and fans club incharge Sudhakar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil