இவரு அட்லிக்கே அண்ணன் போல.. ஜெயிலர் எந்த ஹாலிவுட் படத்தின் காப்பி தெரியுமா? லீக்கான தகவல்!

சென்னை: ஆங்கில படங்களை பார்த்து தமிழ் படங்கள் எடுத்து வருவது காலம் காலமாக இன்ஸ்பிரேஷன் என்கிற பெயரில் இடம்பெற்றுத் தான் வருகிறது.

Recommended Video

Jailer திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த Dhanush *Kollywood | Filmibeat Tamil

ஆனால், சில படங்கள் ஒட்டுமொத்தமாகவே அப்படியே ஈ அடிச்சான் காப்பியாக இருக்கும் போது தான் ரசிகர்கள் அதனை ட்ரோல் செய்யத் தொடங்குகின்றனர்.

இயக்குநர் அட்லியை பலமாக ட்ரோல் செய்த நெட்டிசன்கள் தற்போது இயக்குநர் நெல்சனும் அதே வேலையைத்தான் செய்து வருகிறார் என்றும் ஜெயிலர் படத்தின் கதையும் ஒரு ஹாலிவுட் படத்தின் கதை தான் என நெருங்கிய சினிமா வட்டாரத்திலேயே பேச்சுக்கள் கசிந்துள்ளன.

இயக்குநர் நெல்சன்

இயக்குநர் நெல்சன்

விஜய் டிவியில் வேலை செய்து வந்த நெல்சன் நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். டார்க் காமெடி வகையறா படங்களை இங்குள்ள ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியதும், அவரை தூக்கி கொண்டாட ஆரம்பித்தனர். தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் அவர் இணைந்த டாக்டர் படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது. விஜய்யின் பீஸ்ட் படம் வெளியானதும் ஒட்டுமொத்த கொண்டாட்டமும் நெல்சனை விட்டு காணாமல் போய் ட்ரோல்களே வலம் வருகின்றன.

முதல் படமே காப்பியா

முதல் படமே காப்பியா

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன், ஜாக்குலின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படமே கடந்த 2013ம் ஆண்டு ராசன் மார்ஷல் தர்பர் இயக்கத்தில் வெளியான We are the Milers எனும் பிரபல ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி தான் என படம் வந்தபோதே பலரும் கம்பேர் செய்து கலாய்த்துத் தள்ளினர். அந்த படத்திலும் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி போதைப் பொருளை கடத்த வைப்பது தான் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் போஸ்டரே காப்பி

டாக்டர் போஸ்டரே காப்பி

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர் ஹாலிவுட் படமான தி கிங்ஸ்மேன் சீக்ரெட் சர்வீஸ் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் கலாய்த்தனர். மேலும், டாக்டர் படம் கோலமாவு கோகிலா படம் போலவே இருப்பதாகவும், குழந்தைகள் கடத்தல் கதை ஏகப்பட்ட படங்களில் இதற்கு முன்பாகவே வந்து விட்டதாகவும் விமர்சனங்கள் குவிந்தாலும், அந்த படம் ரசிக்கும் படி இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கோலமாவு கோகிலா படத்தை விட வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

பீஸ்ட் - மால் காப்

பீஸ்ட் - மால் காப்

மால் காப் எனும் ஹாலிவுட் படத்தின் காப்பியாகவே வெளியான யோகி பாபுவின் கூர்கா படத்தை போலவே பீஸ்ட் படம் வெளியானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. படத்தின் கதை ஏற்கனவே ட்ரோல் செய்யப்பட்டு வந்த நிலையில், படம் வெளியான பின்னரும் அதே போன்று அப்பட்டமாக படம் எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லாத நிலையில், நடிகர் விஜய்யின் ஆக்‌ஷனுக்காக மட்டுமே விஜய் ரசிகர்கள் அந்த படத்தை கண்டு ரசித்தனர்.

ஜெயிலரும் காப்பியா

ஜெயிலரும் காப்பியா

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு எந்த ஹாலிவுட் பட்த்தின் கதையை ஆட்டையை போட்டு இருக்கிறார் இயக்குநர் நெல்சன் என ஏகப்பட்ட பிரிசன் படங்களின் பெயர்களை போட்டு ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்கள். இந்நிலையில், ஜெயிலர் படம் கான் ஏர் எனும் பிரபல ஹாலிவுட் படத்தின் கதையை தழுவித் தான் உருவாக உள்ளதாக சீக்ரெட் தகவல்கள் கசிந்துள்ளன.

ஜெயிலர் - கான் ஏர்

ஜெயிலர் - கான் ஏர்

சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை இன்னமும் இயக்குநர் நெல்சன் ஆரம்பிக்கவில்லை. ஆனால், திரைக்கதையை லாக் செய்து ரெஜிஸ்டரும் செய்து விட்டாராம். இந்நிலையில், அந்த படமும் பிரபல ஹாலிவுட் படமான Con Airபடத்தின் அப்பட்டமான காப்பி என நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கல் கசிந்துள்ளன. ஏற்கனவே பல கதைகள் வலம் வந்தாலும், நிக்கோலஸ் கேஜ் நடிப்பில் 1997ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படத்தை தான் ஜெயிலர் எனும் தலைப்பில் நெல்சன் உருவாக்கப் போகிறார் என தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இதுதொடர்பான எந்தவொரு அதிகார்ப்பூர்வ அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தாலும், படம் க்ரிப்பாக பார்க்க சுவாரஸ்யமாக இருந்தால் பிளாக்பஸ்டர் ஹிட் அடிப்பது நிச்சயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X