ஏப்ரலில் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்... பின்வாங்கும் ரஜினியின் ஜெயிலர்... ரசிகர்கள் அப்செட்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் மோகன்லால், சிவ ராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ஜெயிலர் திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளதால், ரஜினியின் ஜெயிலர் சம்மர் ரேஸில் இருந்து பின்வாங்கியதாக சொல்லப்படுகிறது.

 சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர்

தமிழ்த் திரையுலக ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுவது ரஜினி மட்டுமே. தனித்துவனமான ஸ்டைல், பஞ்ச் டயலாக் என மாஸ் காட்டி வரும் ரஜினி, தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து பரபரப்பாகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் ரஜினி மட்டுமே ஒரே சூப்பர் ஸ்டார் என கூறி வருகின்றனர். அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 ஏப்ரல் ரிலீஸில் ஜெயிலர்?

ஏப்ரல் ரிலீஸில் ஜெயிலர்?

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரஜினியின் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரை படக்குழு ஏற்கனவே டீசராக வெளியிட்டு மாஸ் காட்டியது. இந்நிலையில், இந்தப் படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்பட்டது.

 பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்

இதனால் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் பற்றிய அபிஸியல் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனிடையே மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதன் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு 500 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், ஏப்ரல் 14ம் தேதி வெளியாகவிருந்த ஜெயிலர் பின்வாங்கியதாக சொல்லப்படுகிறது.

 புதிய ரிலீஸ் தேதி

புதிய ரிலீஸ் தேதி

ஏப்ரல் 14 தேதி ஜெயிலர் ரிலீஸானால், பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் போது இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கப்படும். முக்கியமாக இரண்டே வாரங்களில் ஜெயிலர் படத்துக்கு முடிவுக்கு கட்டப்படும். இதனால் உஷாரான ஜெயிலர் படக்குழு புதிய ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ளார்களாம். அதன்படி ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் இன்னும் ஜெயிலர் படப்பிடிப்பு முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X