ரஜினியின் ஜெய்லர் ஷுட்டிங் இங்கு தான் நடக்குதா...அப்படி என்ன இருக்கு அங்க
சென்னை : ரஜினியின் 169 வது படமாக உருவாக்கப்பட உள்ள தலைவர் 169 படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாகவும், இதற்கு அனிருத் இசையமைக்க போவதாகவும் பிப்ரவரி மாதம் சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
இந்த படத்தில் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், சிவகார்த்திகேயன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் கார்த்திக் கண்ணன் தான் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக குறப்படுகிறது.
ஆனால் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது பற்றி படக்குழு இதுவரை அதிகாரப்புர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனாலும் படம் பற்றிய பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

ஜெயிலர் ஷுட்டிங் எப்போ
இந்நிலையில் படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. இதனால் விரைவில் படத்தின் ஷுட்டிங் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட அறிவிப்பு, டைட்டில் அறிவிப்பு என வெளியாகி பல நாட்கள் ஆன பிறகும் இதுவரை ஷுட்டிங் எப்போது என எந்த தகவலும் இல்லை.

இங்கு தான் ஷுட்டிங் நடக்குதா
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, ஜெயிலர் படத்திற்காக ஐதராபாத்தில் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறதாம். படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட உள்ளதாம். ஜெயிலர் படத்தின் பெரும்பாலான பகுதிகள் தான் ஐதராபாத் ஃபிலிம் சிட்டியில் தான் படமாக்கப்பட உள்ளதாம். செட் அமைக்கும் பணிகள ஏற்கனவே துவங்கி விட்டதால் விரைவில் ஷுட்டிங் துவங்குவதற்கான வேலைகளும் துவங்கப்பட உள்ளதாம்.

தீவிர கதை டிஸ்கஷனில் நெல்சன்
ஆகஸ்ட் மாத இரண்டாவது வாரத்தில் ஜெயிலர் படத்தின் ஷுட்டிங்கை துவங்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.அதே சமயம் டைரக்டர் நெல்சன் திலிப்குமார், படத்தின் கதையை ஃபைனல் செய்வதற்காக அடிக்கடி ரஜினியுடன் கதை டிஸ்கஷனில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ரஜினி, நெல்சனிடம் சொன்னது என்ன
இருந்தாலும் கதையில் நெல்சனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டாராம் ரஜினி. அவரது ஸ்டைலில் கதையை உருவாக்கும் படியும் ரஜினி, நெல்சனிடம் சொல்லி விட்டாராம். படத்தில் நடிக்க யாரை தேர்வு செய்திருக்கிறார் என்பது பற்றியும் நெல்சனிடம் ரஜினி கேட்டு வருகிறாராம். முழுக்க முழுக்க டைரக்டரின் நோக்கிலேயே படத்தின் மொத்த தேர்வும் நடத்த ரஜினி நினைக்கிறாராம்.
Recommended Video

அப்படி அங்கு என்ன தான் இருக்கு
ரஜினி நடித்த அண்ணாத்த படத்தின் ஷுட்டிங்கும் ஐதராபாத்தில் தான் நடத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாகவும், தமிழகத்தில் ஷுட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்ததாலும் ஐதராபாத்தில் தான் படத்தில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கினர். கொரோனா காரணமாக அண்ணாத்த பட ஷுட்டிங் தான் அங்கு நடத்தப்பட்டது என்றால் ஜெயிலர் படத்தித்தையும் அங்கேயே நடத்துகிறார்களா என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











