»   »  வெளியானது 'காலா கரிகாலன்' ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக்.. வலை தளங்களில் வைரல்! #KaalaFirstLook

வெளியானது 'காலா கரிகாலன்' ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக்.. வலை தளங்களில் வைரல்! #KaalaFirstLook

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்தின் புதிய படமான காலா கரிகாலனின் முதல் தோற்றப் போஸ்டர்கள் இன்று மாலை வெளியாகின.

முகம், கழுத்துப் பகுதிகளில் ரத்தம் தெறிக்க ரஜினிகாந்த் ஆக்ரோஷத்துடன் இருப்பது போன்ற போஸ்டர் ஒன்றும், மும்பை தாராவி பின்னணியில் ஒரு ஜீப்பின் மீது ஜாலியாக டான் ரஜினி அமர்ந்திருப்பது போலவும் இரு போஸ்டர்கள் வெளியாகின.


Rajinikanth's Kaala first look released

படத்தின் தயாரிப்பாளரான தனுஷும், இயக்குநர் பா ரஞ்சித்தும் இந்த போஸ்டர்களை வெளியிட்டனர்.


இந்த போஸ்டர்களைப் பார்க்கவும் பகிரவும் ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். இதனால் இந்தப் படங்கள் வெளியான கையோடு மள மளவென வலைத் தளங்களில் பகிரப்பட்டன. விளைவு வெளியான அடுத்த நிமிடமே இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வைரலாகிவிட்டன.


Rajinikanth's Kaala first look released

மும்பையில் வாழ்ந்த நெல்லை மக்களின் தலைவன் கரிகாலனின் கதைதான் இந்தப் படம். படப்பிடிப்பு வரும் மே 28-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.

English summary
The First look posters of Rajinikanth's Kaala Karikalan has been released today evening.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil