»   »  250வது நாளில் ரஜினியின் கபாலி!

250வது நாளில் ரஜினியின் கபாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் 250 வது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் கபாலி. கடந்த ஜூலை 22-ம் தேதி உலகெங்கும் கிட்டத்தட்ட 5000 அரங்களில் வெளியானது. வரலாறு காணாத ஓபனிங்கைப் பெற்ற இந்தப் படம் ரூ 500 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.


Rajinikanth's Kabali crosses 250 days

இந்தப் படம் தமிழகத்தில் பல அரங்குகளில் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது.


மதுரையில் மணி இம்பாலா திரையரங்கில் இன்றும் ரெகுலர் ஷோவாக இந்தப் படம் ஓடிக் கொண்டுள்ளது. அந்த அரங்கில் காலைக் காட்சியாக தொடர்ந்து 250 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டுள்ளது கபாலி.


இன்று படத்தின் 250வது நாள் விளம்பரத்தை நாளிதழ்களில் வெளியிட்டுள்ளார் படத்தைத் தயாரித்த கலைப்புலி தாணு.

English summary
Rajinikanth's Kabali movie is crossing 250 days in Madurai Mani Impala theater today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil