»   »  ரூ 300 கோடியைத் தாண்டியது ரஜினியின் கபாலி வசூல்... இந்த வார இறுதியிலும் ஹவுஸ் ஃபுல்!

ரூ 300 கோடியைத் தாண்டியது ரஜினியின் கபாலி வசூல்... இந்த வார இறுதியிலும் ஹவுஸ் ஃபுல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் வசூலில் தினமும் ஒரு சாதனைப் படைத்து வருகிறது. இந்தப் படம் வெளியான ஆறாவது நாளில் ரூ 300 கோடியைத் தாண்டியுள்ளது.

இந்த வார இறுதி நாட்களிலும் பெரும்பாலான அரங்குகளில் காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகியுள்ளதால், ரூ 400 கோடிகளை எளிதாகத் தாண்டிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ரூ 400 கோடியைத் தாண்டினால், கபாலிதான் ரஜினியின் திரையுலக வாழ்க்கையிலேயே அதிக தொகையை வசூலித்த திரைப்படம்.


வெளிநாட்டில்

வெளிநாட்டில்

கபாலியின் வெளிநாட்டு வசூல்தான் அத்தனை இந்திய சினிமாக்காரர்களையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்திருக்கிறது. இந்தப் படத்தின் உரிமையை ரூ 8.5 கோடிக்கு வாங்கியிருந்தனர் அமெரிக்க விநியோகஸ்தர்கள். இந்தத் தொகையை முதல் நாளே தாண்டிவிட்டது கபாலி. முதல் மூன்று நாட்களில் மட்டுமே ரூ 28 கோடியைக் குவித்து விநியோகஸ்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


ஆறாவது நாளில்

ஆறாவது நாளில்

படம் வெளியான ஆறாவது நாள் வரை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் அனைத்திலும் சேர்த்து மொத்தம் 138 கோடியைக் குவித்துள்ளது கபாலி. இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ 160 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்த வசூல் கணக்கு சாதாரண டிக்கெட் கட்டண அடிப்படையில்தான் கணக்கிடப்பட்டுள்ளது.


உண்மையான தொகை எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் சத்யம் சினிமாஸ் அரங்குகள், மாயாஜால் போன்ற ஒரு சிலவற்றைத் தவிர மற்ற அனைத்து அரங்குகளிலுமே முதல் மூன்று நாள் காட்சிகளுக்கு டிக்கெட் ஒன்று சராசரியாக ரூ 1000 வரை விற்பனையானது. இந்தத் தொகையின் அடிப்படையில் வசூலைக் கணக்கிட்டால் அது எங்கேயோ போகும் என்கிறார்கள் கபாலி வியாபாரத்தை கூர்ந்து கவனித்து வருபவர்கள்.


இரண்டாவது வாரமும்...

இரண்டாவது வாரமும்...

கபாலி படத்துக்கான இரண்டாவது வார டிக்கெட்டுகளும் படுவேகமாக விற்பனையாகி வருகின்றன. நாளை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைக்கான டிக்கெட்டுகள் நகர்ப்புற அரங்குகளில் 90 சதவீதம் விற்பனையாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.


English summary
Rajinikanth's blockbuster Kabali has collected Rs 300 plus cr in 6 days all over the world.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil