»   »  கபாலி மூன்றாவது போஸ்டர்... வெளியான சில நொடிகளில் ட்ரெண்டிங் ஆனது!

கபாலி மூன்றாவது போஸ்டர்... வெளியான சில நொடிகளில் ட்ரெண்டிங் ஆனது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் மூன்றாவது போஸ்டர் இன்று வெளியாக இணையத்தைக் கலக்க ஆரம்பித்துள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் படம் கபாலி. இந்தப் படம் சென்னை, மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது.


இறுதிக் கட்டத்தில்..

இறுதிக் கட்டத்தில்..

படம் முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இன்னொரு பக்கம் இந்தப் படத்தின் வியாபாரம் இதுவரை ரஜினியின் வேறு எந்தப் படத்துக்கும் நடக்காத அளவுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
விற்பனையில் சாதனை

விற்பனையில் சாதனை

அமெரிக்க உரிமை மட்டும் ரூ 8.5 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனைப் படைத்துள்ளது. அடுத்து கபாலியின் தெலுங்கு, கன்னட ஏரியாக்கள் உரிமை மட்டும் ரூ 45 கோடிக்கு விலைப் பேசப்பட்டு வருகிறது. கேரள உரிமையும் ரூ 7 கோடி வரை பேசப்பட்டு வருகிறது.
தகவலே இல்ல

தகவலே இல்ல

இதுவரை இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. சில ஷூட்டிங் ஸ்பாட் ஸ்பாட் ஸ்டில்கள் வெளியாகின. மற்றபடி படம் குறித்த வேறு செய்தி, படங்கள், டீசர் என எதுவும் வெளியாகவில்லை.


மூன்றாவது போஸ்டர்

மூன்றாவது போஸ்டர்

இந்த நிலையில் கபாலியின் மூன்றாவது டிசைனை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டார். இயக்குநர் ரஞ்சித்தும் இதனை வெளியிட்டார்.
ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

இந்தப் போஸ்டர் இணையத்தை அதிர வைக்கும் அளவு வைரலாகப் பரவுகிறது. வெளியான சில நொடிகளில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துவிட்டது கபாலி போஸ்டர்!
ஜூனில்

ஜூனில்

இந்தப் படத்தின் ட்ரைலர் வரும் ஏப்ரலில் வெளியாகிறது. படத்தை தேர்தல் முடிந்த பிறகு ஜூனில் வெளியிட கலைப்புலி தாணு திட்டமிட்டுள்ளார்.
English summary
The third poster of Rajinikanth's Kabali movie has been released today and going viral online.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil