»   »  இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் ரூ. 250 கோடி வசூல்... சொல்கிறது கபாலி டீம்!

இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் ரூ. 250 கோடி வசூல்... சொல்கிறது கபாலி டீம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படம் ரிலீஸான முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.250 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் கடந்த 22ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸானது. கபாலிடா, நெருப்புடா, தலைவர்டா என்று கூறி தியேட்டர்களுக்கு சென்றவர்கள் முடியலைடா, வெறுப்புடா என திரும்பி வந்துள்ளனர்.

ரஜினி ரசிகர்கள் சிலரால் கூட படத்தை கொண்டாட முடியவில்லை.

ரூ.250 கோடி

ரூ.250 கோடி

இந்த நிலையில் கபாலி படம் ரிலீஸான அன்று இந்தியாவில் மட்டும் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கபாலி தமிழகத்தில் ரூ. 100 கோடியும், பிற மாநிலங்களில் ரூ. 150 கோடியும் வசூலித்துள்ளது என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபாலி

கபாலி

கபாலி படம் உலகம் முழுவதும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஸ்கிரீன்களில் வெளியானது. அமெரிக்காவில் 480 ஸ்கிரீன்கள், மலேசியாவில் 490 ஸ்க்ரீன்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் 500க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் வெளியானது.

ரூ.100 கோடி

ரூ.100 கோடி

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, சுவிட்சர்லாந்து, டென்மார்க், ஹாலந்து, ஸ்வீடன், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுளிலும் கபாலி வெளியானது. உலக அளவில் கபாலி ஒரே நாளில் ரூ.100 கோடி வசூலித்ததாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தாணு

தாணு

இந்திய நடிகர்களின் படங்களில் ரஜினி படம் தான் இப்படி வசூல் சாதனை செய்துள்ளது. ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் தான். அது ரஜினிகாந்த் என கபாலி பட தயாரிப்பாளர் தாணு தயாரித்துள்ளார்.

குண்டக்க மண்டக்க விற்ற டிக்கெட்

குண்டக்க மண்டக்க விற்ற டிக்கெட்

கபாலி இப்படி வசூலை வாரிக் குவிக்க அதன் டிக்கெட் மிகப் பெரிய தொகைக்கு விற்கப்பட்டதும் கூட ஒரு முக்கியக் காரணமாகும். குறிப்பாக சாதாரணமாக 120க்குள் முடிந்து விடும் டிக்கெட்டை 2000 ரூபாய் வரைக்கும் கூட விற்றதாக பெரும் குமுறலே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Megastar Rajinikanth-starrer gangster drama “Kabali” has collected a record Rs 250 crore on its first day, producers have said. The Tamil language film, which released worldwide yesterday amid much fan frenzy, has earned Rs 100 crore from theatres in Tamil Nadu itself.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil