யார் சூப்பர் ஸ்டார்...நச்சுன்னு நெத்தியடியாய் சொன்ன ரஜினி...தீயாய் பரவும் வீடியோ
சென்னை : சூப்பர் ஸ்டார் யார் என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தே தெளிவாக, விளக்கமாக ஒரு மேடையில் பேசி உள்ளார். சினிமா விழா ஒன்றில் ரஜினி பேசிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு உலா வந்து கொண்டிருக்கிறது. இதை வைத்து பெரிய குழப்பமே நடந்து கொண்டிருக்கிறது. பலரும் தங்களுக்கு ஃபேவரைட்டான நடிகர்களை அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான் என சொல்லி வருகிறார்கள்.

யார் சூப்பர்ஸ்டார் ?
இந்த சமயத்தில் சினிமா விழா ஒன்றில், சூப்பர் ஸ்டார்ன்னா யார் என்பது பற்றி தெளிவாக, விளக்கமாக ரஜினி பேசி உள்ளார். ரஜினி பல ஆண்டுகளுக்கு முன் பேசிய இந்த வவீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பே மிக தெளிவாக, யதார்த்தத்தை புரிந்து கொண்டு பேசிய இந்த பேச்சை ரசிகர்கள் அதிக அளவில் லைக் செய்து வருகிறார்கள். இந்த வீடியோ சாமி படத்தின் வெற்றி விழாவின் போது எடுக்கப்பட்டது என பலரும் கூறி வருகின்றனர்.

ரஜினியின் மாஸ் பேச்சு
அந்த வீடியோவில் ரஜினி பேசுகையில், சூப்பர்ஸ்டார் என்பது, ஒரு கலெக்டர், ஒரு கமிஷனர், ஒரு டிஐஜி, ஒரு சிஎம், ஒரு பிஎம். அது போல ஒரு இடம். அந்தந்த காலகட்டத்தில் யார் வருகிறார்களோ, அவங்க அவங்க அந்த கால கட்டத்தில் எடுத்துக்குறாங்க. அவங்க போன பிறகு அந்த இடம் போய் விடுவதில்லை. அந்த ஆள் போய் விடுவார். ஆனால் பதவி அப்படியே தான் இருக்கும். அந்த வீடியோவில் ரஜினி பேசுகையில், சூப்பர்ஸ்டார் என்பது, ஒரு கலெக்டர், ஒரு கமிஷனர், ஒரு டிஐஜி, ஒரு சிஎம், ஒரு பிஎம். அது போல ஒரு இடம். அந்தந்த காலகட்டத்தில் யார் வருகிறார்களோ, அவங்க அவங்க அந்த கால கட்டத்தில் எடுத்துக்குறாங்க. அவங்க போன பிறகு அந்த இடம் போய் விடுவதில்லை. அந்த ஆள் போய் விடுவார். ஆனால் பதவி அப்படியே தான் இருக்கும்.

நச்சுன்னு சொன்ன ரஜினி
Long Live King ன்னு சொல்வாங்க. கிங் எப்போ சாகிறானோ. அப்போது இன்னொரு கிங் வருவான். அதனால் அந்ததந்த காலகட்டத்தில் யார் நிறைய ஹிட்ஸ் கொடுக்கிறார்களோ, யாருடைய படம் நிறைய பணத்திற்கு போகிறதோ, யார நிறைய மக்கள் விரும்பி பார்க்கிறார்களோ, யார் படம் வாங்கினா யாருக்கும் நஷ்டம் வராதோ அவங்க தான் சூப்பர் ஸ்டார். எத்தனையோ சூப்பர்ஸ்டார் இருக்கீங்க. எல்லோரும் சூப்பர்ஸ்டார் ஆக முடியும்.

செகண்ட் ஆஃப் இதுக்கு தான்
ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க. இதெல்லாம் சொல்றதால சாகுற வரைக்கும் நான் ஏதோ பண்ணிட்டு நானே கடைசி வரை சூப்பர் ஸ்டாரா இருக்கனும்னு சொல்லாதீங்க. ஏன்னா, எந்த தொழிலாகட்டும் அந்த தொழில் முன்னுக்கு வந்து, பண்ம் சம்பாதித்து, பெரிய இடத்திற்கு வந்து, ஒரு இமேஜ் கிரியேட் பண்ண நாம் முதல் பாதி நாள் கஷ்டப்படுகிறோம். செகண்ட் ஆஃப் வந்துட்டு அந்த சம்பாதிச்ச பணத்த, பேர, புகழ காப்பாத்துறது தான் என பேசி உள்ளார்.

இதனால தான் இவர் சூப்பர்ஸ்டார்
இதை பார்த்த நெட்டிசன்கள் மிக சரியாக பேசி இருக்கிறார். இவர் சொன்னபடியெல்லாம் நடந்து கொண்டதால் தான் இவரை அனைவரும் சூப்பர் ஸ்டார் என கொண்டாடுகிறார்கள். சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற ஆசைப்படுபவர்களுக்கு இனி நன்றாக புரியும். இதனால தான் இந்த மனுஷனை எல்லோரும் சூப்பர் ஸ்டார்ன்னு சொல்றாங்க. இந்த பேச்சிற்கு பிறகு ரஜினி நடித்த படங்களில் ஒன்று அல்லது இரண்டு படங்கள் மட்டும் தான் பிளாஃப். மற்ற அனைத்தும் வசூல் சாதனை என பாராட்டி புகழ்ந்து வருகிறார்கள்.
இப்படி நிறைய வீடியோ போடுங்க
போலியான வசூல் கணக்கு காட்டாதவர். இவர் தான் உண்மையான சூப்பர் ஸ்டார். இது மாதிரி அவரோட பழைய பேச்சுக்களை எடுத்து போடுங்க. அப்போ தான் நிறைய பேருக்கு அந்த மனுஷன் எப்படி பட்டவருன்னு புரியும். இப்போ வரைக்கும் அவர் ஏன் சூப்பர்ஸ்டாரா இருக்காருன்னு இப்போ தான் தெரியுது. சூப்பர் பேச்சு தலைவா.


Click it and Unblock the Notifications











