twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியை ஏமாற்றிய முதல்வர் கருணாநிதி..அபூர்வ ராகங்கள் சுவாரஸ்யம்

    |

    சென்னை: தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த் திரை உலகில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 47 ஆண்டுகள் ஆகிறது. இன்றுவரை அவர்தான் திரையுலகின் டாப் ஸ்டாராக இருக்கிறார்.
    அபூர்வ ராகங்கள் படம் மூலம் திரையுலகில் முதன்முதலில் கால்பதித்தார் ரஜினிகாந்த்.
    சாதாரண சிறு வேடத்தில் வந்தவர் இன்று தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக 70 வயதிலும் நடித்து வருவது பிரமிக்கத்தக்க விஷயமே.

    திருமணத்திற்கு முன் இளம் பெண்ணுடன் காரில்.. போலீசில் வசமா சிக்கிய நாகசைத்தன்யா!திருமணத்திற்கு முன் இளம் பெண்ணுடன் காரில்.. போலீசில் வசமா சிக்கிய நாகசைத்தன்யா!

    வில்லன் வேடம் கிடைத்தால் போதும் ரஜினிகாந்தின் பெரிய லட்சியம்

    வில்லன் வேடம் கிடைத்தால் போதும் ரஜினிகாந்தின் பெரிய லட்சியம்

    கர்நாடகாவில் ஒரு எளிய குடும்பத்தில் இளைய சகோதரனாக பிறந்து கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கியவர் ரஜினிகாந்த். அவருடைய நடை. உடை. பாவனைகளை பார்த்து அவரது நண்பர்கள் சினிமாவில் நடிக்கலாம் என்று சொல்ல அதை ஏற்று சென்னைக்கு வந்து பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்து தமிழ் திரையுலகில் நடிகர் ஆவதற்கு முயற்சித்தார் ரஜினிகாந்த். சாதாரண வேடம் அல்லது அதிகபட்சமாக வில்லன் வேடம் கிடைத்தால் பெரிய விஷயம் என்பது தான் ரஜினிகாந்தின் ஆரம்ப லட்சியமாக இருந்தது இதை அவரே பலமுறை பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

    தூக்கி வைத்து கொண்டாடிய ரசிகர்கள்

    தூக்கி வைத்து கொண்டாடிய ரசிகர்கள்

    ஆனால் ரஜினிகாந்த் எதிர்பார்க்காத ஒரு உச்சபட்ச இடத்தை தமிழ் ரசிகர்கள் ரஜினிக்கு வழங்கினார்கள். இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள், அவர் எடுத்த முயற்சிகள், அடைந்த ஏமாற்றங்கள், அவமானங்கள், தோல்விகள் சாதாரண விஷயமல்ல. ரஜினிகாந்தின் ஆரம்ப கால வாழ்க்கையில் பல சுவாரசிய சம்பவங்கள் நடந்துள்ளன அதை அவர் பலமுறை பேட்டிகளில் கூறி உள்ளார் அது பற்றி பார்ப்போம்.

    பாலசந்தரின் அறிமுகம் வாழ்க்கையில் திருப்புமுனை

    பாலசந்தரின் அறிமுகம் வாழ்க்கையில் திருப்புமுனை

    1973 களில் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிக்க கற்றுக்கொள்ள வந்த சிவாஜி ராவ்-க்கு (ரஜினிகாந்துக்கு) தமிழ் சுத்தமாக வராது. கருத்த உருவம், பரட்டைத்தலை. அந்த நேரத்தில் கதாநாயகர்கள் சுருட்டை முடி, வெள்ளைவெளேர் உருவத்துடன் நடித்து வந்த காலம். ரஜினியின் ஆசையும் கதாநாயகன் ஆவது எல்லாம் கிடையாது. சினிமாவில் வாய்ப்பு. அதிகபட்சமாக ஒரு வில்லன் வேஷம் என்பதே. ஒரு நாள் கல்லூரிக்கு வந்திருந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கவனத்தை ரஜினி கவர, படித்து முடித்து விட்டு என்னை வந்து பார் என்று அவர் சொல்லி சென்றுவிட்டார். படித்து முடித்த பின் பாலசந்தரை சென்று ரஜினிகாந்த் (அப்பல்லாம் சிவாஜி ராவ்) பார்த்தார்.

    1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ரஜினிக்காக திறக்கப்பட்ட தமிழ் திரையுலக கதவு

    1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ரஜினிக்காக திறக்கப்பட்ட தமிழ் திரையுலக கதவு

    ரஜினியின் மேனரிசம் பிடித்துப் போக அவரை தனது அபூர்வ ராகங்கள் படத்தில் சிறு வேடத்தில் பாலசந்தர் அறிமுகப்படுத்தினார். அதேநேரம் தெலுங்கில் வெளியான பட்டினப்பிரவேசம் படத்தில் தமிழில் ஜெய்கணேஷ் செய்த பாத்திரத்தை தெலுங்கில் ரஜினிகாந்த் செய்தார். அபூர்வ ராகங்கள் படத்தில் திருப்புமுனை பாத்திரமாக ரஜினிகாந்த் வேடம் இருக்கும். அவரது முதல் காட்சியே கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழையும் காட்சிதான். 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தமிழ் திரையுலக கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ரஜினிகாந்தை தமிழ் திரையுலகம் வெற்றியாளராக சுவீகரித்துக் கொண்டது.

    அபூர்வ ராகங்கள் 100 வது நாள் விழாவில் முதல்வர் கையால் கேடயம்-நீடிக்காத சந்தோஷம்

    அபூர்வ ராகங்கள் 100 வது நாள் விழாவில் முதல்வர் கையால் கேடயம்-நீடிக்காத சந்தோஷம்

    அபூர்வ ராகங்கள் படம் வெளியான பின்னர், அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது. அந்தப்படத்தின் 100வது நாள் விழாவை அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்று பரிசளிக்கும் விழாவாக நடத்தினார் இயக்குநர் பாலசந்தர். இந்த விழாவில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கேடயங்கள் பரிசளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. முதல் படத்திலேயே விழாவில் முதல்வர் கருணாநிதி கையால் பரிசு வாங்க போகிறோம் என்ற ஆவலில் முன்னரே தயாராகி மேடைக்கு கீழே சென்று அமர்ந்திருந்தார் ரஜினிகாந்த். பரபரப்பான நிகழ்ச்சியில் தாங்க முடியாத சந்தோசத்தில் இருந்தார் ரஜினிகாந்த்.

    ரஜினிக்கு கிடைத்த தாங்க முடியாத ஏமாற்றம்

    ரஜினிக்கு கிடைத்த தாங்க முடியாத ஏமாற்றம்

    முதலமைச்சர் கருணாநிதி மேடைக்கு வந்தார் வாழ்த்திப் பேசிய பின்னர் கேடயங்கள் பரிசாக ஒவ்வொருவராக அழைத்து கொடுக்கப்பட்டது. ரஜினிகாந்தின் முறை வரும் என அவர் காத்திருந்தார். ஆனால் முதல்வருக்கு அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் இருந்ததால் அவர் பாதியிலேயே கிளம்பிவிட்டார். முதல்வர் கையால் விருது வாங்குகிறோம் என்கிற சந்தோஷத்திலிருந்த ரஜினிகாந்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் காலம் தான் எவ்வளவு விசித்திரமானது. கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் சாதாரண சிவாஜிராவ் பின் நாளில் ரஜினிகாந்த ஆகி வாய்ஸ் கொடுத்து 96 வெற்றிக்கு துணையாக இருப்பார் என்று அன்று முதல் கருணாநிதிகூட நினைத்திருக்க மாட்டார்.

    ஏமாற்றம் கடின உழைப்பால் ஏணியாக மாறியது

    ஏமாற்றம் கடின உழைப்பால் ஏணியாக மாறியது

    அந்த ஏமாற்றத்த்தை ரஜினிகாந்த்தால் ஜீரணிக்க முடியவில்லை, காலங்கள் உருண்டோடியது சிறிது சிறிதாக தனது பாத்திரங்களின் வலுவை, தமது ஸ்டைலான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்து முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்தார் ரஜினிகாந்த். சிறிய வேடம், வில்லன் வேடம், இரண்டாவது கதாநாயகன் வேடம், கதாநாயகன் வேடம், சூப்பர் ஸ்டார், உச்ச நடிகர் என அவரது வளர்ச்சி மிக அபாரமாக இருந்தது. 5 ஆண்டுகளில் மிகப் பெரிய நடிகராக நம்பர்-1 நடிகராக ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் இருந்தார்.

    96 ஆம் ஆண்டு அரசியலில் ரஜினியின் பங்கு

    96 ஆம் ஆண்டு அரசியலில் ரஜினியின் பங்கு

    அதன் பின்னர் ரஜினிக்கு தோல்வி என்பதே இல்லை, பின்னால் திரும்பிப் பார்க்கவே நேரம் இல்லை வேகம், வேகம், வேகம் முன்னேறிச் சென்று கொண்டே இருந்தார். 1996ஆம் ஆண்டு தமிழக அரசியலில் ஜெயலலிதா ஆட்சியின் மீது வெறுப்புக் கொண்டு ஒரு மிகப்பெரிய அணி அமைக்கப்பட்டது. அந்த அணிக்கு ரஜினிகாந்த வாய்ஸ் தரவேண்டும் என்று சொல்லி சோ, மூப்பனார் போன்றோர் வற்புறுத்த தனிப்பட்ட முறையிலும் பாதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் அந்த ஆட்சிக்கு எதிராக வாய்ஸ் கொடுத்து திமுக கூட்டணி வெற்றிபெற அவரும் ஒரு காரணமாக இருந்தார்.

    கேடயம் வாங்க கியூவில் நின்றவர் ஆட்சி மாற்றத்திற்கு அச்சாணியாக ஆனார்

    கேடயம் வாங்க கியூவில் நின்றவர் ஆட்சி மாற்றத்திற்கு அச்சாணியாக ஆனார்

    யோசித்து பாருங்கள் 1975-ல் கேடயம் வாங்க முதல்வர் மேடையில் 102 வது ஆளாக வரிசையில் நின்ற சிவாஜிராவ், 1996 ஆம் ஆண்டு அதே கருணாநிதி முதல்வராக அவரும் காரணமாக அமைந்து விழா மேடையில் அருகில் அமரும் வாய்ப்பு. விந்தையான ஒன்றுதான். இதுபோன்ற அனுபவம் ஒரு சிலருக்குத்தான் கிடைத்துள்ளது. எம்.கே.ராதா மிகப்பெரிய ஹீரோவாக இருந்தபோது அவருடன் திரைப்படத்திற்கு சென்ற எம்ஜிஆர் ரசிகர்களால் சூழப்பட்ட எம்.கே.ராதாவை கஷ்டப்பட்டு கூட்டத்திலிருந்து காப்பாற்றி காரில் ஏற்றி அனுப்பி வைத்தாராம். அதே எம்ஜிஆர் சில ஆண்டுகளில் ஸ்டார் ஆக இருவரும் திரைப்படத்திற்கு சென்றபோது ரசிகர்கள் எம்ஜிஆரை சுற்றி சூழ்ந்துள்ளனர். எம்.கே.ராதாவை கண்டுக்கொள்ளவே இல்லை.

    அனைத்து அரசியல் தலைவர்களுடன் நட்பு பாராட்டும் ரஜினிகாந்த்

    அனைத்து அரசியல் தலைவர்களுடன் நட்பு பாராட்டும் ரஜினிகாந்த்

    1996 வெற்றிக்கு பின்னர் ரஜினிகாந்த் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அனைத்து அரசியல் தலைவர்களுடனும் தன்னுடைய நட்பை சரிசமமாக வைத்துக்கொண்டார். ரஜினிகாந்தின் செல்வாக்கை யாரும் அரசியலுக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு நடுநிலையுடன் நடந்து கொண்டார். ஜெயலலிதா ஆட்சிக்கு வரக்கூடாது என்று வாய்ஸ் கொடுத்த ரஜினி ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுடன் நட்பு பாராட்டி தனது மகளின் திருமணத்திற்கு அழைத்து அவர் கையால் தாலி வாங்கி மகள் கழுத்தில் கட்ட வைத்தார். ரஜினிகாந்த் பின்னர் ஜெயலலிதாவுடன் அவரது நட்பு அவரது மறைவு வரை தொடர்ந்தது.

    எம்ஜிஆருக்கு அடுத்து தமிழகத்தின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த்

    எம்ஜிஆருக்கு அடுத்து தமிழகத்தின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த்

    தமிழக அரசியல்வாதிகள் மட்டுமல்ல தேசிய அரசியல் தலைவர்கள், இன்றைய பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ரஜினிகாந்துடன் நட்புடன் இருப்பதைக் காணமுடிகிறது. தன்னுடைய அரசியல் செல்வாக்கை எந்த கட்சிகளும் நேரடியாக பயன்படுத்தாமல் தவிர்த்து வருகிறார். ரஜினிகாந்த கடந்து வந்த பாதை மலர்ப்பாதை அல்ல அதில் முள் இருந்தது, பல தடைகள் இருந்தது அத்தனையும் கடந்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்த ரஜினிகாந்த் தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் இடத்தில் இன்றும் இருக்கிறார். எம்ஜிஆர் 60 வயது வரை நடித்து வந்தார் முதல்வராக பொறுப்பேற்ற அவர் நடிப்பிலிருந்து விலகினார் அவர் இருக்கும் வரை அவர்தான் உச்ச நடிகர், அவருக்கு பின் அந்த இடத்தை பிடித்த ரஜினிகாந்த் இன்று 70 வயதைத் தாண்டி நடித்துக் கொண்டிருந்தாலும் இன்று வரை அவர்தான் உச்ச நடிகராக இருக்கிறார்.

    Recommended Video

    கைல காசு இருக்காது, Rajini-க்கு 1 வடை, BharathiRaja speech *Kollywood
    3 தலைமுறையாக நடித்தும் இன்றும் குழந்தைகள் விரும்பும் ஹீரோ ரஜினி

    3 தலைமுறையாக நடித்தும் இன்றும் குழந்தைகள் விரும்பும் ஹீரோ ரஜினி

    அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நடிகர்கள் அவருடைய இடத்தில் பாதியை கூட பிடிக்க முடியாத அளவிற்கு தான் உள்ளனர். தமிழகம் தாண்டி வெளிநாடுகளில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம், 47 ஆண்டுகளில் 3 தலைமுறையை தாண்டி நடித்தாலும், இன்றும் குழந்தைகளுக்கும், இளையோருக்கும் ரஜினி முதல் சாச் என்பதுதான் ரஜினியின் பலம். பூஜை போடும் படம் விற்பது அல்ல படம் எடுக்கவே ரஜினிதான் அனுமதி தரணும் என்கிற அளவில் ரஜினியின் வளர்ச்சி உள்ளது. இதுதான் ரஜினிகாந்த். ரஜினியின் 47 ஆம் ஆண்டு திரைவாழ்வின் வெற்றிப்பயணம் தொடர்ந்து பொன்விழாவை நோக்கி நகரும் என்று அவளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அது நிச்சயம் நடக்கும் என்று நாமும் நம்புவோம்.

    English summary
    It has been 47 years since Rajinikanth, who is the supreme star of the Tamil film industry, stepped into the film world. Till date he is the top star of the film industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X