Don't Miss!
- Technology
குருநாதா இங்கயும் வந்துட்டீங்களா! 2 வார பேட்டரி ஆயுள் உடன் Redmi பேண்ட்! விலை என்ன?
- Lifestyle
Today Rasi Palan 02 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் வேலையில் தலையிடாமல் இருப்பது நல்லது...
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜெயிலர் படத்தில் ரஜினியின் கேரக்டர் இதுதானா...? இன்று மாலை காத்திருக்கும் மாஸ் அப்டேட்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படத்தில் இருந்து முக்கியமான அப்டேட்டை படக்குழு தெரிவித்துள்ளது.
அபூர்வராகம் டூ ஜெயிலர் வரை...அனைவரும் கொண்டாடும் ரஜினி.. பிறந்தநாள் ஸ்பெஷல்!

பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார்
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த், இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வில்லனாக தனது கேரியரை தொடங்கியவர் தற்போது பல கோடி ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வருகிறார். ஸ்டைலான ஆக்டிங், பஞ்ச் டயலாக்ஸ், கெத்தான பெர்ஃபாமன்ஸ் என வெரைட்டியாக ரவுண்டு கட்டி வரும் ரஜினி, தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் கேரக்டர் அறிமுகம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில், ரஜினியுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் ஜெயிலர், 2023 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை அவரது கேரக்டர் பற்றிய அப்டேட்டை படக்குழு வெளியிட உள்ளது.

முத்துவேல் பாண்டியனின் மாஸ் என்ட்ரி
அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு முத்துவேல் பாண்டியன் வருகிறார் என்ற கேப்ஷனுடன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. தெறி மாஸ்ஸான போஸ்டருடன் வெளியாகியுள்ள இந்த அப்டேட், ரஜினி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி ஜெயிலராக நடிப்பது உறுதியாகி இருந்தாலும், அவரது கேரக்டரின் பெயர் என்ன என்பது இதுவரை சஸ்பென்ஸாகவே இருந்தது. இந்நிலையில், ரஜினியின் கேரக்டர் முத்துவேல் பாண்டியன் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரிலீஸ் தேதி அப்டேட் வருமா?
ரஜினியின் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டர் செம்ம மாஸாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல், இந்த அப்டேட்டுடன் ஜெயிலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதேபோல் லால் சலாம் படத்தில் இருந்தும் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது. சிவாஜி படத்தின் ஒரு காட்சியில் "பராசக்தி ஹீரோடா" என வில்லனிடம் பஞ்ச் வசனம் பேசுவார் ரஜினி. அதேபோல், ஜெயிலர் படத்தில் "கில்லி வில்லன்டா" என பஞ்ச் அடிப்பாரா என நெட்டிசன்கள் கமென்ட்ஸ் செய்து வருகின்றனர். கில்லி படத்தில் வில்லனாக வரும் பிரகாஷ்ராஜின் கேரக்டர் முத்துவேல் பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.