»   »  ரஜினியின் புதிய படம் அறிவிப்பு.. தாணு தயாரிக்க ரஞ்சித் இயக்குகிறார்!

ரஜினியின் புதிய படம் அறிவிப்பு.. தாணு தயாரிக்க ரஞ்சித் இயக்குகிறார்!

By Shankar
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க பா ரஞ்சித் இயக்குகிறார்.

மலேஷியா, தாய்லாந்து, ஹாங்காங், சென்னையில் 120 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

படத்தின் தலைப்பு, பிற நடிக நடிகையர் விவரங்களை விரைவில் அறிவிக்கவிருப்பதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து இன்று ரஜினி - தாணு தரப்பிலிருந்து அவர்களின் பிஆர்ஓக்கள் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

40 வருடங்களுக்கு முன்பு, சுப்பிரமணியா பிலிம்ஸ் - கலைப்புலி இண்டர்நேஷனல் ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களைத் தொடங்கி தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர் கலைப்புலி எஸ். தாணு.

சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டியவர்

சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டியவர்

ரஜினி நடித்த பைரவி படத்தை வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணுதான், முதன்முறையாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினியின் பெயருடன் இணைத்து பைரவி படத்தை விளம்பரம் செய்தார்.

விநியோகஸ்தராக இருந்த கலைப்புலி எஸ். தாணு, 1984 ஆம் ஆண்டு தயாரிப்பாளராகி... யார் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி கௌரவ வேடத்தில் நடித்தார்.

ரஜினி - தாணு நட்பு

ரஜினி - தாணு நட்பு

கலைப்புலி எஸ். தாணு தயாரித்து முதன்முறையாக இயக்கிய புதுப்பாடகன் படம் உட்பட அவர் தயாரித்த பல படங்களை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்ததே சூப்பர்ஸ்டார் ரஜினிதான்.

ரஜினி நடித்த அண்ணாமலை, முத்து, பாட்ஷா, குசேலன் ஆகிய படங்கள் உருவாகும் நேரத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் சூழல் இருந்தது, சில பல காரணங்களால் காலதாமதம் ஆனது.

தாணுவின் தவம்

தாணுவின் தவம்

ரஜினியை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என ஏறக்குறைய 35 வருடங்களாக கலைப்புலி எஸ். தாணு தவம் இருந்தார். அவரது தவத்துக்குக் கிடைத்த வரமாக தற்போது, கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் ரஜினி.

பா ரஞ்சித்

பா ரஞ்சித்

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார் பா.இரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இவர் இயக்கும் மூன்றாவது படம் இது.

சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன்

கதாநாயகி உட்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார்.

தொழில்நுட்பக் குழு

தொழில்நுட்பக் குழு

மெட்ராஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் - கபிலன், உமாதேவி, கானா பாலா. கலை இயக்கம் - ராமலிங்கம். படத்தொகுப்பு - பிரவீன் கே.எல். சண்டைப்பயிற்சி - அன்பு - அறிவு
நடனம் - சதீஷ். ஒலி வடிவமைப்பு - ரூபன்.

120 நாட்கள்

120 நாட்கள்

ஆகஸ்ட் மாதம் மலேஷியாவில் படப்பிடிப்பு தொடங்கி, 60 நாட்கள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து தாய்லாந்து, ஹாங்காங்க் மற்றும் சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Rajinikath's new movie has been officially announced. The yet to be titled movie is directing by Pa Ranjith and produced by Thaanu. Shooting will be commenced on August first week in Malaysia.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more