பொன்னியின் செல்வன் வெற்றி.. ரஜினியின் அடுத்த 2 படங்களை தயாரிக்கும் லைகா.. இயக்குநர்கள் இவங்க தானா?

சென்னை: பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் இப்படியொரு வசூல் வேட்டையை நடத்தி வருவதை பார்த்து சந்தோஷத்தில் மிதந்து வருகிறது லைகா நிறுவனம்.

கமல்ஹாசனின் இந்தியன் 2 படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 62 என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது லைகா.

இந்நிலையில், தர்பார் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஜினிகாந்தின் 2 படங்களை லைகா நிறுவனமே தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெரிய பட்ஜெட் படங்கள்

பெரிய பட்ஜெட் படங்கள்

தமிழ் சினிமாவில் லைகா நிறுவனம் காலடி வைத்ததில் இருந்தே 2.0, பொன்னியின் செல்வன், இந்தியன் 2 என பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூல் வேட்டை நடத்தி வருவதால் தொடர்ந்து பிரபல நடிகர்களுடன் கைகோர்த்து புதிய படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

பொன்னியின் செல்வன் வெற்றி

பொன்னியின் செல்வன் வெற்றி

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு சம்மருக்கு பொன்னியின் செல்வன் 2ம் பாகமும் வெளியாகி வசூல் வேட்டை நடத்த காத்திருக்கிறது. மேலும், இந்தியன் 2 திரைப்படமும் அடுத்த ஆண்டு வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ரஜினி படம்

மீண்டும் ரஜினி படம்

லைகா தயாரிப்பில் 2.0, தர்பார் என தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்தார். தர்பார் படம் சொதப்பிய நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் ரஜினி நடித்தார். ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரம்மாண்டமாக உருவாக உள்ள ரஜினியின் அடுத்த 2 படங்களை லைகா நிறுவனமே தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டான் இயக்குநர்

டான் இயக்குநர்

லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை இயக்கி சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. அவர் சமீபத்தில் ரஜினியை சந்தித்து சொன்ன கதை பிடித்துப் போன நிலையில், அவர் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகள் இயக்கத்தில்

மகள் இயக்கத்தில்

சிபி சக்கரவர்த்தியை தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும் அந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த இரு படங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X