»   »  கண்ணா, என் பேரு "காளி"யும் இல்லை "கண்ணபிரானும்" இல்லை.. "கபாலி"ம்மா...!

கண்ணா, என் பேரு "காளி"யும் இல்லை "கண்ணபிரானும்" இல்லை.. "கபாலி"ம்மா...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு கண்ணபிரான் என பெயர் சூட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இல்லை இல்லை. கபாலி எனப் பெயரிட முடிவு செய்திருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிங்கா படத்தைத் தொடர்ந்து, அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இந்தப் படத்தில் ரஜினி ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். தன்ஷிகா, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.


இன்னும் பெயரிடப் படாத இந்தப் படத்தின் தலைப்பு இது தான் எனப் பல்வேறு யூகங்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.


காளியா, கண்ணபிரானா?

காளியா, கண்ணபிரானா?

முதலில் இப்படத்திற்கு காளி எனப் பெயரிட்டிருப்பதாக தகவல் வெளியானது. பின்னர், காளி இல்லை, ரஜினி படத்தலைப்பு கண்ணபிரான் என்ற தகவல் உலா வந்தது.


கபாலி...

கபாலி...

ஆனால், இந்த இரண்டு தலைப்பு குறித்தும் படக்குழுவினர் உறுதி செய்யவில்லை. இந்நிலையில், மூன்றாவதாக கபாலி என்ற தலைப்பை ரஜினி படத்திற்கு வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


கபாலீஸ்வரன்...

கபாலீஸ்வரன்...

இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் கபாலீஸ்வரன் என்பதால், அப்பெயரை சுருக்கி ‘கபாலி' என்று வைக்கலாம் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மயிலாப்பூர் தாதா...

மயிலாப்பூர் தாதா...

மயிலாப்பூரில் மிகப்பெரிய தாதாவாக வலம்வந்த கபாலியை மையப்படுத்தியே ரஜினியின் கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளதாம். அதனால் ரஜினியின் கதாபாத்திரப் பெயரையே படத்தின் தலைப்பாக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மயிலாப்பூர் டூ மலேசியா...

மயிலாப்பூர் டூ மலேசியா...

மயிலாப்பூரில் ஆரம்பித்து, பின்னர் கதை மலேசியாவிற்கு பயணமாகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற செப்டம்பர் 17-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.


பர்ஸ்ட் லுக் போஸ்டர்...

பர்ஸ்ட் லுக் போஸ்டர்...

அதற்கு முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


3 எழுத்து சென்டிமெண்ட்...

3 எழுத்து சென்டிமெண்ட்...

சிவாஜி, லிங்கா என ரஜினியின் முந்தைய இரண்டு படங்களும் அவரின் கதாபாத்திரப் பெயரையே படத்தலைப்பாக பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த இரண்டு படங்களைப் போலவே கபாலியும் மூன்று எழுத்தில் வருவதால், நிச்சயம் இது தான் தலைவரின் அடுத்தப் படத்தலைப்பு என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


மெட்ராஸ் கதை நைனா

மெட்ராஸ் கதை நைனா

இப்போது வெளியாகும் வரும் தகவல்களைப் பார்த்தால் இது மெட்ராஸ் கதை போலவே தெரிகிறது. எனவே ரஜினி மெட்ராஸ் பாஷையில் பேசி நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.. சூப்பர் நைனா!


English summary
Superstar Rajinikanth's next Tamil film is reportedly titled 'Kabali', and loosely based on the real life of a Chennai mafia don.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil