For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  படையப்பா வெளியாகி 23 வருஷம் ஆகிடுச்சாம்..PadayappaTheGOAT ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

  |

  சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் #PadayappaTheGOAT என்கிற ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், செளந்தர்யா, மணிவண்ணன், அப்பாஸ், நாசர், பிரகாஷ் ராஜ், செந்தில் மற்றும் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படம் 1999ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தெதி திரையரங்குகளில் வெளியானது.

  23 ஆண்டுகள் ஆனாலும், இப்போது சன் டிவியில் இந்த படத்தை போட்டாலும், டிஆர்பியை தட்டித் தூக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  23 ஆண்டுகளை கடந்த படையப்பா

  23 ஆண்டுகளை கடந்த படையப்பா

  "என் வழி தனி வழி", கிரைனட் மலை, அந்த பாம்பு புத்துக்குள்ள எப்படி கையை விட்டீங்க, ஊஞ்சல் சீன், ஒரே அறையில் வனவாசம் இருக்கும் நீலம்பரி, சிவாஜியின் கெஸ்ட் அப்பியரன்ஸ் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள் என ஏகப்பட்ட வெயிட்டேஜ் காட்சிகளுடன் என்றுமே மறக்க முடியாத ஒரு படமாக நடிகர் ரஜினிகாந்துக்கு அமைந்த படம் தான் படையப்பா. அப்படியொரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எந்த நடிகருக்கும் இயல்பாகவே வரும் அந்த அளவுக்கு படையப்பா படத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. படையப்பா படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

  உங்களுக்கு வயசே ஆகல

  உங்களுக்கு வயசே ஆகல

  23 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட படையப்பா படத்திலேயே நடிகர் ரஜினிகாந்துக்கு வயதாகி விட்டதை குறிக்கும் "வயசானாலும் உன் ஸ்டைல் இன்னும் மாறவில்லை" என்கிற வசனமும் அப்பாஸ் பேசும், "உங்களுக்கு வயசே ஆகலை" என்கிற வசனமும் நடிகர் ரஜினிகாந்துக்கு எப்போதுமே பொருந்தும். 23 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அண்ணாத்த, தலைவர் 169 என கெத்துக் காட்டி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

  படையப்பா The GOAT

  படையப்பா The GOAT

  அது என்னப்பா எதுக்கெடுத்தாலும் GOAT என ஆடு பெயரை வைத்து அழைக்கின்றனர் என நினைக்க வேண்டாம். Greatest of All Time என்பதன் சுருக்கமே GOAT என அழைக்கப்படுகிறது. படையப்பா படம் 23 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், #PadayappaTheGOAT என்கிற ஹாஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் சும்மா தெறிக்க விட்டு வருகின்றனர்.

  அதிக சம்பளம்

  அதிக சம்பளம்

  "அத்தனை பேருக்கும் பேசியதை விட ஒரு மடங்கு அதிக சம்பளம்.. வெற்றிவிழாவில் கலைஞர்களுக்கு தங்கசெயின் பரிசு. பட லாபத்தில் கல்வி அறக்கட்டளை தொடங்கினார். படத்தில் பயன்படுத்திய பொருட்களை விற்று அதில் வந்த பணத்தை சினிமா தொழிலாளர்களுக்கு கொடுத்தார் ரஜினிகாந்த்" என படையப்பா படத்தின் வரலாற்றையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

  நக்மா மாற்றம்

  நக்மா மாற்றம்

  செளந்தர்யாவுக்கு முன்னதாக படையப்பா படத்தில் நடிகை நக்மா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால், சில நாள் ஷூட்டிங்கிற்கு பிறகு அவர் அதிரடியாக மாற்றப்பட்டு செளந்தர்யா நடிக்க ஒப்பந்தமானார். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ரஜினிகாந்த் உடன் நக்மா படையப்பா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அரிய புகைப்படம். பாட்ஷா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நக்மா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  முதல் 50 கோடி

  முதல் 50 கோடி

  தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக 50 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்த படம் படையப்பா தான் என்கின்றனர். தென்னிந்திய சினிமாவிலேயே அதிக வசூல் சாதனை படைத்த படமும் படையப்பா தான் என ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்றும் இன்றும் என்றும் பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷாவாக கோலோச்சி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். படையப்பா 2ம் பாகத்திற்கான பேச்சுவார்த்தைகளை கே.எஸ். ரவிக்குமார் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி உருவானால், வேற லெவலில் இருக்கும் என்பது கன்ஃபார்ம்.

  English summary
  Rajinikanth’s Padayappa completes 23 years of its release in theaters. Rajinikanth fans trending PadayappaTheGOAT hashtag in Twitter and shares so many CDP’s and Unseen photos.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X