»   »  கமல்ஹாசன் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி நான் பதில் கூற விரும்பவில்லை! - ரஜினிகாந்த்

கமல்ஹாசன் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி நான் பதில் கூற விரும்பவில்லை! - ரஜினிகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்ட்ரைக்கை முடிக்க சொல்லி கமல் விஷாலுக்கு உத்தரவு- வீடியோ

கமல் ஹாஸன் வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

10 நாட்கள் இமயமலை ஆன்மீகப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். தனது போயஸ் தோட்ட இல்லத்தை அடைந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

Rajinikanths reply to Kamals comments

அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வருவது குறித்துக் கேட்கப்பட்டபோது, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நான் எப்போதோ சொல்லி விட்டேன். தமிழக அரசு இதுகுறித்து உறுதியாக மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்," என்றார்.

பல விஷயங்களில் நீங்கள் மௌனம் காப்பதாக கமல் ஹாஸன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, "கமல்ஹாசன் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி நான் பதில் கூற விரும்பவில்லை," என்றார் ரஜினிகாந்த்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ரஜினி எதுவும் சொல்லவில்லையே என முன்பு கமல் ஹாஸனிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது கமல், 'அவர் (ரஜினி) பல்வேறு விஷயங்களில் அப்படித்தான் இருக்கிறார். எனவே இந்த ஒரு விஷயம் பற்றி மட்டும் குற்றம் சாட்டுவது சரியல்ல," என்றார்.

English summary
Rajinikanth has replied that he wouldn't like to reply to Kamal Haasan's comments.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X