அண்ணாத்த எப்படி இருக்கு தலைவா... ரஜினி கொடுத்த அசத்தல் விமர்சனம்

சென்னை : டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் சமீபத்தில்தான் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள அண்ணாத்த படம் காமெடி, எமோஷன் கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் ரஜினி, கிராமத்து தலைவராக நடித்துள்ளாராம். இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட ரிலீஸ்

பிரம்மாண்ட ரிலீஸ்

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தீபாவளி ரிலீசாக நவம்பர் 4 ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து விட்டது. ரஜினி படம், அதுவும் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு வெளியாகும் முதல் ரஜினி படம் என்பதால் பிரம்மாண்டமாக படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறதாம்.

வேலையை முடித்த ரஜினி

வேலையை முடித்த ரஜினி

ரஜினி, ஐதராபாத் ஷுட்டிங்கை முடித்து விட்டு அமெரிக்கா செல்வதற்கு முன்பே தனது போர்ஷன் ஷுட்டிங், டப்பிங் என அனைத்தையும் முடித்து விட்டார். அதற்கு பிறகு தான் மற்ற நடிகர், நடிகைகளின் போர்ஷன் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் கொல்கத்தாவில் படத்தை முடித்து விட்டு, படக்குழு சென்னை திரும்பியது.

விநாயகர் சதுர்த்தியில் ஃபஸ்ட்லுக்

விநாயகர் சதுர்த்தியில் ஃபஸ்ட்லுக்

படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் கிட்டதட்ட முடிய உள்ளதால், படத்தின் ஃபஸ்ட்லுக்கை விநாயகர் சதுர்த்தியன்று ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்படாவிட்டாலும் ரஜினி ரசிகர்கள் இதை டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

பெங்களூருவில் ஓய்வு

பெங்களூருவில் ஓய்வு

வழக்கமாக ஒரு படத்தை முடித்த உடன், இமயமலை சென்று தியானத்தில் ஈடுபடுவது ரஜினியின் வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனா காரணமாக இமயமலை செல்லாமல், பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் ரஜினி தனிமையில் ஓய்வெடுத்து வருகிறாராம். அதோடு அடுத்த படமான தலைவர் 169 பற்றிய ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார்.

சந்தேகப்பட்ட சிவா

சந்தேகப்பட்ட சிவா

ரஜினி அமெரிக்கா செல்வதற்கு முன், அண்ணாத்த எனது கடைசி படமாக இருந்து விடக்கூடாது என படக்குழுவினரிடம் சொல்லி உள்ளார். இதனால் படத்தில் ரஜினிக்கு திருப்தி இல்லையோ, அதனால் தான் ரஜினி இப்படி சொன்னாரா என்ற சந்தேகம் டைரக்டர் சிவாவிற்கு ஏற்பட்டு விட்டதாம்.

ரஜினி கொடுத்த கமெண்ட்

ரஜினி கொடுத்த கமெண்ட்

இதனால் சமீபத்தில் ரஜினிக்கு, படத்தின் ஃபஸ்ட் காப்பியை போட்டு காட்டி உள்ளார். ரஜினி என்ன சொல்கிறார் என்பதை பார்த்து விட்டு தான் அடுத்த கட்ட வேலைகளில் இறங்க வேண்டும் என நினைத்துள்ளார் சிவா. படத்தை பார்த்த ரஜினி, சிவாவிடம், அண்ணாத்த படம் அனைவரையும் எமோஷனலாக படத்துடன் கனெக்ட் செய்து விடும். அதிலும் குழந்தைகள், பெண்களை படம் கவரும் என அடித்து சொன்னாராம்.

முழுமையான குடும்ப படம்

முழுமையான குடும்ப படம்

ரஜினியே படம் பற்றி இப்படி ஒரு விமர்சனத்தை கொடுத்து விட்டதால் சிவா படுகுஷியாகி விட்டாராம். ரஜினியின் இந்த கருத்தை வைத்து பார்க்கும் போது அண்ணாத்த நிச்சயம் ஒரு முழுமையான குடும்ப படமாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகி விட்டது. எஜமான் படத்திற்கு பிறகு ரஜினி முழுவதுமாக வேஷ்டி கட்டி, கிராமத்து ரோலில் நடிக்கும் படம் இதுவாக தான் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் படத்தின் வெற்றி இப்போதே உறுதியாகி விட்டதாக சொல்லப்படுகிறது.

Recommended Video

Superstar Rajini தருவதாக சொன்ன அந்த பணம் | Lyricist Piraisoodan | Rewind Raja Ep-44| Filmibeat Tamil
வலிமையும் தீபாவளி ரிலீஸ்

வலிமையும் தீபாவளி ரிலீஸ்

அதே சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான அஜித்தின் வலிமையும் தீபாவளிக்கு தான் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 2019 பொங்கலுக்கு பிறகு பாக்ஸ் ஆபீசில் அஜித், ரஜினி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இன்னும் உறுதியாகவில்லை

இன்னும் உறுதியாகவில்லை

சமீபத்தில் ரஷ்யா படப்பிடிப்பை முடித்து திரும்பிய படக்குழு போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகளை துவக்கி விட்டதாம். இதனால் விநாயகர் சதுர்த்தியன்று வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள், டிரைலர், டீசர் ஏதாவது வெளியிடப்படலாம். அதோடு ரிலீஸ் தேதியும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X