எனக்கு ஆத்ம திருப்தி தந்த படங்கள் இவை இரண்டும் தான்...ரஜினி சொன்ன சுவாரஸ்ய தகவல்
சென்னை : 1975 ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் துவங்கி, கடந்த ஆண்டு ரிலீசான அண்ணாத்த வரை நடிகர் ரஜினிகாந்த் 160 க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டார். ரஜினி படம் என்றாலே அது ஹிட் படம் என்னும் அளவிற்கு தனி பிராண்டாக மாறி உள்ளார்.
Recommended Video
இந்நிலையில் தான் நடித்ததில் தனக்கு மிகவும் பிடித்த, ஆத்ம திருப்தி கொடுத்த படங்கள் பற்றி அவரே ஓப்பனாக பேசி உள்ளார். அதோடு பல சுவாரஸ்யமான விஷயங்களையும் மேடையில் ரஜினி தெரிவித்துள்ளார்.
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சார்பில் 'கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகர வாழ்வு' எனும் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

நிம்மதி, சந்தோஷம் கிடைக்கல
இதில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, பணம், புகழ், பெயர், பெரிய பெரிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என அனைத்தையும் பார்த்த எனக்கு சந்தோஷம், நிம்மதி என்பது 10 சதவீதம் கூட கிடைக்கவில்லை. வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி நிரந்தரம் கிடையாது.சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.

எனக்கு ஆத்ம திருப்தி தந்த படங்கள்
என்னையும் பெரிய நடிகர் என்று இங்கு சொன்னார்கள். இது பாராட்டா திட்டா என எனக்கு தெரியவில்லை. நான் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த படங்கள் ராகவேந்திரா மற்றும் பாபா.இந்த இரு படங்கள் வெளியான பிறகு தான் மக்கள் பலருக்கும் ராகவேந்திரா மற்றும் பாபா பற்றி தெரியவந்தது. பாபா படத்திற்கு பிறகு நிறைய பேர் இமய மலைக்கு சென்றதாக சொன்னார்கள்.என்னுடைய ரசிகர்கள் இந்த இயக்கத்தில் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் இன்னும் நான் நடிகராக இங்கே இருக்கிறேன்.

ரசிகர்களுக்கு ரஜினி அட்வைஸ்
இந்த உலகத்தை விட்டு செல்லும் போது சொத்தை சேர்த்து வைத்து செல்வதை விட நோயாளியாக இல்லாமல் செல்வது முக்கியம். நோயாளியாக இருந்தால் பிறருக்கு கஷ்டங்கள் ஏற்படலாம். இதனால் உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு ரொம்ப முக்கியம். இல்லையென்றால் சந்தோஷமாக மருத்துவமனை செல்லாமலேயே நடமாடி கொண்டிருக்கும் போது போய் சேர்ந்து விட வேண்டும். நான் கூட இரண்டு முறை மருத்துவமனை போய்ட்டு வந்தவன்.

ரஜினி சொன்ன மனிதர்களின் செயல்
அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல உபதேசங்கள், பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வதை கேட்க வேண்டும். நல்ல சிந்தனைகளுக்காக புத்தகங்களை வாசிக்க வேண்டும். மனிதர்கள் கடந்த காலங்களையும், எதிர்காலத்தையும் நினைத்து கவலைக் கொள்வர். ஆனால் குழந்தைகள் அப்படியல்ல. வலிகளில் இருந்து வெளிவர நிகழ் காலத்தில் சிந்தனையை வைக்க வேண்டும்.இவ்வாறு ரஜினி பேசினார்.


Click it and Unblock the Notifications











