»   »  இமயமலையில் தியான மண்டபம்... ரஜினி விசிட் எப்போது?

இமயமலையில் தியான மண்டபம்... ரஜினி விசிட் எப்போது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இமய மலையில் கட்டிய 'ஸ்ரீ பாபாஜி தியான நிலைய'த் திறப்பு விழா அண்மையில் நடந்தது.

ரஜினிகாந்தின் ஆதரவு மற்றும் உதவியுடன் அவரது நண்பர்கள் விஎஸ் ஹரி, விடி மூர்த்தி, விஸ்வநாதன், ஸ்ரீதர் ராவ், திலீபன், வைத்தீஸ்வரன் (மும்பை) ஆகியோர் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் 'ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்' கட்டியுள்ளனர். இங்கு இலவசமாக தங்கிக் கொள்ளலாம்.

Rajinikanth's Sri Babaji Meditation Hall in The Himalaya's opened

இந்தத் தியான நிலையத்தை, மஹாவதார் ஸ்ரீபாபாஜி தியானம் செய்யும் இடத்திற்குச் சென்று பூஜை செய்து பின்பு இக்கட்டடத்தின் கிரஹபிரவேச விழாவை விமர்சையாக நடத்தியுள்ளனர்.

Rajinikanth's Sri Babaji Meditation Hall in The Himalaya's opened

திறப்பு விழாவில் ரஜினி குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. விரைவில் ஸ்ரீ பாபாஜி தியான நிலையத்திற்கு ரஜினிகாந்த் வருகை தரவிருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

Rajinikanth's Sri Babaji Meditation Hall in The Himalaya's opened

இந்த பாபாஜி கோயில் மற்றும் குகை அமைந்துள்ள இடம் உத்தரகண்ட் மாநிலத்தில் இமய மலைத் தொடரில் உள்ள துரோணகிரி மலையில் அமைந்துள்ளது.

Rajinikanth's Sri Babaji Meditation Hall in The Himalaya's opened

இந்த பாபாஜி குகை அமைந்துள்ள இடம் துரோணகிரியில் உள்ள குகுசினா என்னும் ஓர் அழகிய மலை கிராமம். அமைதி ததும்பும் இந்த அழகிய கிராமத்தில் இருந்து, சிறிது தூரம் நடந்து சென்றால் பாபாஜியின் குகையை அடைந்துவிட முடியும்.

ரஜினிகாந்த் இந்த குகைக்கு வந்து தியானம் செய்துவிட்டுப் போன பிறகு, ஆண்டு தோறும் இங்கு வரும் பக்தர்கள், குறிப்பாக ரஜினியின் ரசிகர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

English summary
Rajinikanth and his friends VS Hari, VD Moorthy, Lawyer Vishwanathan, Sridhar Rao, Dr. Thileepan, Vaideeswaran (Mumbai) have built Sri Babaji Dhyana Nilayam, an Ashram cum House for devotees to stay and do meditation near Sri Babaji cave Himalaya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X