»   »  மாப்பிளை இவருதான்... ஆட்டிப் படைக்கும் ரஜினி டைட்டில் மேனியா!

மாப்பிளை இவருதான்... ஆட்டிப் படைக்கும் ரஜினி டைட்டில் மேனியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி படம் மீது முன்பு ஈர்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் இப்போதோ ரஜினி பட டை்டில் மீது சினிமாக்காரர்களுக்கு ஏகமாகவே ஈர்ப்புஆட்டிப்படைத்து வருகிறது. ரஜினி பட டைட்டிலை வாங்கி ஏதாவது ஒரு உப்புமாவை அதாவது கதையை ரெடி பண்ணி படமாக படையல் இடுவது இப்போது ரொம்ப சுளுவான வேலையாக மாறி விட்டது.

இப்படித்தான் மாப்பிள்ளை என்ற படத்தை உருவாக்கினார் தனுஷ். பாவம்ப்பா ரஜினி.. இப்படியா பெயரைக் கெடுப்பாரு இந்த தனுஷ் என்று கண்டனங்களை வாரிக் குவித்ததுதான் மிச்சம்.படையப்பா படத்துல ரஜினி ஒரு வசனம் சொல்லுவாரு, மாப்பிளை இவரு தான் ஆனா, இவரு போட்டுருக்க சட்டை என்னோடது. இப்ப வர்ற படங்களை ரஜினி பார்த்தால், படம் இவங்களோடது தான் ஆனா, இவங்க வச்சுருக்குற தலைப்பு என்னோடதுன்னு சிரிச்சுட்டே சொல்வார்.

ரஜினி பட டைட்டிலை வைத்து கருவாகி, உருவாகி வெளியான படங்களைப் பட்டியலிட்டுள்ளோம். பாருங்கள்.

குரு சிஷ்யன்:

குரு சிஷ்யன்:

முதல்ல வெளிவந்தது இந்த படம் தான். ஆனா, ரஜினியோட குரு சிஷ்யனுக்கும் சத்தியராஜோட குரு சிஷ்யனுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை என்னனா..? ரெண்டு படத்துலயும் ரெண்டு ஹீரோக்கள்..அதைத் தவிர வேற ஒன்னும் இல்ல. கதை வேற வேற.டைட்டிலை வாங்கி அதுக்காகவே இப்படி கதையை உருவாக்கினார்கள் போல.

பொல்லாதவன் :

பொல்லாதவன் :

ரஜினியின் மருமகன் மாமனாரின் திரைப்பட பெயரினை முதல் முறையாக கைப்பற்றிய திரைப்படம் இது தான். இதற்கு பிறகு தான் மாப்பிளை திரைப்படம் வெளியானது. இந்த பொல்லாதவனுக்கும், ரஜினியின் பொல்லாதவனுக்கும் சம்பந்தமே கிடையாது. கதையும் வேறு, கதாபாத்திரங்களும் வேறு.

தர்மதுரை :

தர்மதுரை :

வளர்ந்துவரும் ஒரு திறமையான நடிகர் என்று கூறினால் அது கண்டிப்பாக விஜய் சேதுபதியை தான் கூற வேண்டும். இவரின் புதிய திரைப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தலைப்பு கிடைத்தது என்பது அவருக்கு பெருமைக்குரியது. ஆனால் ரஜினியின் தர்மதுரை பெயரைச் சொன்னாலே கம்பீரம் தலை காட்டும்.. "வி.சே". படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வீரா :

வீரா :

ரஜினியின் நகைச்சுவை திரைப்படங்களில் முக்கியமானது வீரா. இத்திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கரைபுரண்டோடியிருக்கும். அப்படிப்பட்ட படத்தின் தலைப்பை வைத்து அதிரடிப் படமாக உருவாகி வருகிறது பாபி சிம்ஹாவின் புதுப் படம்.எப்படி இருக்கப் போகிறதோ!

மனிதன் :

மனிதன் :

1987-ம் ஆண்டு வெளிவந்த ரஜினி காந்தின் மிகப்பெரிய வெற்றித் திரைப்படம். இத்திரைப்பட தலைப்பினை தற்போது பெற்றுள்ளார் உதயநிதி. நகைச்சுவையிலிருந்து கெத்து மூலம் அதிரடிக்கு மாறியவர் உதயநிதி. மனிதன் எப்படியோ...!

தனிக்காட்டு ராஜா :

தனிக்காட்டு ராஜா :

ஆர்யாவின் படம் இது. சிங்கிள் ஹீரோவாக கலக்க வந்து பின்னர் தடம் மாறி பல ஹீரோக்களுடன் இணைந்தும், கெஸ்ட் ரோல்களில் வந்தும் இப்போது அவுட் ஆப் ஆர்டரில் இருக்கும் ஆர்யா, தனது அடையாளத்தை மாற்றவும் மீண்டும் தனது இடத்தை பிடிக்கவும் கையில் எடுத்திருக்கும் புதிய முயற்சியின் வெளிப்பாடு தான் ரஜினியின் தனிக்காட்டு ராஜா.

வசனம் கூட பிரபலம் தான் :

வசனம் கூட பிரபலம் தான் :

ரஜினிகாந்தின் திரைப்பட பெயர் மட்டுமில்லை அவர் பேசிய வசனங்கள் கூட பிரபலம் தான். கடந்த ஆண்டு வரை வடிவேலுவின் வசனம் தான் திரைப்பட பெயராக வெளிவந்தது. அனால், இந்த ஆண்டு தயாரிக்கும் திரைப்படங்கள் ரஜினியின் வசனத்தை தலைப்பாக கொண்டு வரவிருக்கின்றது.

எனக்கு இன்னொரு பேரு இருக்கு :

எனக்கு இன்னொரு பேரு இருக்கு :

பாடகர், இசையமைப்பாளராக திரைக்கு அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வருபவர் ஜி வி பிரகாஷ்குமார். இவர் தற்போது நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு பாட்ஷா திரைப்படத்தின் பிரபலமான வசனமான "எனக்கு இன்னொரு பேரு இருக்கு" என்பதை தலைப்பாக வைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் மோசன் போஸ்டரில் கூட ரஜினியின் வசனம் தான் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

போடா ஆண்டவனே என் பக்கம் :

போடா ஆண்டவனே என் பக்கம் :

கொஞ்சம் இதுல இருக்குற ஒருமைய பன்மையாக்குனா அது நம்ம தலைவரோட பஞ்ச் வசனம்தான். அது, படையப்பா படத்துல வர "போடா ஆண்டவனே நம்ம பக்கம்" -ன்ற வசனம் தான். இந்த தலைப்பில் நடிப்பவர் விஷ்ணு.

கண்ணா... டைட்டிலும் டயலாக்கும் ஈஸியா கிடச்சுடும்.. ஆனால் நடித்துக் கிடைக்கும் பெயர்.. அது கஷ்டம்..உழைக்கனும்.. அப்பத்தான் பலன் கிடைக்கும்...இது ரஜினி சொன்னது இல்லைங்க.. "மீ" சொன்னது!

English summary
Super Star RajiniKanth is a Most Famous Actor in Not a Tamil cinema Industry, Hefamous In all over India. Now a Days his Movie's Title and his punch Dialogues are used as a movies name by developed heroes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil