»   »  ரஜினியின் நிறைவேறாத 'அந்த' கனவு என்னவாக இருக்கும்?: தலைமுடியை பிய்த்துக் கொள்ளும் ஃபேன்ஸ்

ரஜினியின் நிறைவேறாத 'அந்த' கனவு என்னவாக இருக்கும்?: தலைமுடியை பிய்த்துக் கொள்ளும் ஃபேன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்: ரஜினியின் நிறைவேறாத கனவு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் தலைமுடியை பிய்த்துக் கொள்கிறார்கள்.

2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழா, பிரஸ் மீட்டை பார்த்து வியக்காதவர்களே இல்லை என்று கூறலாம்.

விழா முடிந்தும் இன்னும் அது பற்றியே ரசிகர்களும், பிரபலங்களும் பேசிக் கொண்டார்கள்.

ராணா

ராணா

இசை வெளியீட்டு விழாவை நடிகர் ராணா, பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சியின்போது கரண் ரஜினியிடம் ஒரு கேள்வி கேட்டார்.

ஆசை

ஆசை

ரஜினிஜி உங்களுக்கு நிறைவேறாத கனவு எதுவும் உள்ளதா என்று கரண் கேட்டார். அதற்கு ரஜினி, ஒரேயொரு கனவு இன்னும் நிறைவேறவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என பதில் அளித்தார் ரஜினி.

தலைவர்

தலைவர்

தலைவரின் நிறைவேறாத கனவு என்னவாக இருக்கும் என்று ரஜினி ரசிகர்கள் தலைமுடியை பிய்த்துக் கொள்கிறார்கள். நம்மிடம் சொன்னால் அதை நிறைவேற்றி வைக்க மாட்டோமா என்று ஆதங்கப்படுகிறார்கள்.

ரஜினி

ரஜினி

சிஸ்டம் சரியில்லை என்று கூறிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக தெரிவித்தார். ஒருவேளை அரசியல் பிரவேசம் பற்றி தான் ரஜினி அவ்வாறு கூறினாரோ என்றும் பேசப்படுகிறது.

English summary
Bollywood director Karan Johar asked Rajinikanth, 'Do you have any dream yet to be fulfilled in life' and Rajini replied, "There is one yet unfulfilled dream. Let's see what happens to it." Rajini opened up about his dream in the 2.0 audio launch in Dubai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X